பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ళ செளந்தர்ய.

ஒரு வானொலியில் பேட்டிகண்ட பெண் பேட்டி வாக்கில் கேட்டாள்: “நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? காதலைப்பற்றி உங்கள் அனுபவம் என்ன? அவள் கேள்வி யுடன் எனக்கு சண்டையில்லை. நல்ல கேள்வியும் கூட ஆனால் அதற்கு நேரிடையான பதிலை அவளிடம் சொல்ல - எனக்குச் சங்கடம். நான் நழுவப் பார்த்தும் அவள் விடுவதா யில்லை. யாரைக் காதலித்தீர்கள்? உன்னையேதான்- (அது உண்மையும்கூட) அடுத்த நொடி ரிக்கார்டிங் ரூமிலிருந்து 'ஆஹாங்காரம். பொடி நேரம் அவள் கண்கள் என்னைச் சந்தித்தன. அதற்கு நான் எவ்வளவு பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்? அதுவும் நிஜம்தான் என்று எனக்குப் பட்டது. நான் கிழவன். அவள் யுவதி. நாங்கள் பேசிய கருத்தில் இது ஒரு பரஸ்பரம். பரஸ்பரத்துக்கு வயது வித்தியாசங்கள் கிடையாது. அலசினால் கசங்கிவிடும். அதை உணர்ந்தவர்க்கு லலிதமும் நளினமும் தாண்டி ஒரு மறவாத நறுமணம் நினைவில் பிறந்தாச்சு.

அலைபாயும். அலை மீளும். அலை ஒய்வதில்லை. காதலும் ஒய்வதில்லை. காதல் ஒருவர் மேல்தான் நிலைத் திருக்கும் என்பது சாத்தியமில்லை. நியாயம் இல்லை.

Beause I am in love with the world itself. Giffanya), ப்ரேமைக்கு அணைத்துக்கொள்ள அதன் கைகள் போதா. என் செயல் ஆவது யாதுமில்லை. யாவும் உன் செயலே. கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்துக்கொண்டார். இது போல ஏதேதோ மேலெழுந்தவாரியில் சம்பந்தமற்று ஆனால் மிக்க நெருக்கம் படைத்த அர்த்தத் தகடுகள் பொன்னில் உதிர்கின்றன. எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமல் மனம் நினைவுறுகிறது. ஆகவே புரிவது அவசியமில்லை என்பது புரிகிறது. அடையவேண்டியது நிறைவுதான்.

洪源