பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாலி

நாளை மறுநாள் தீபாவளி. இன்று என் பிறந்தநாள். சேகர் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டான். கண்ணன் குடும்பத்துடன் வந்து இறங்கி இன்னும் ஒருமணிநேரம் ஆகவில்லை. ஷோபா: "நான் வருவதாக இல்லை. ஆனால் இன்று உங்கள் பிறந்தநாள்தான் எங்களுக்கு முக்யம்.”

நானும் ஹைமாவதியும் கூடத்தில் கட்டிலில் அமர்ந் திருக்கிறோம். எது சாக்கிலேனும் குடும்பம் ஒன்றுசேர்ந்து ஒருசேரப் பார்க்க நன்றாய்த்தானிருக்கிறது. ஹைமாவதிக்குத் தான் ஒருவாரத்துக்கு வேலை ஜகா வாங்கும். எண்ணெய்க் கடாயை இன்று மத்யானம் ஆரோஹணம் பண்ணுவதாய் உத்யேசம். காயத்ரி இன்று மத்யானம் வந்துவிடுவாள். கோட்டி'யை ஒருவர் தனியாகப் பார்த்துக் கொள்ளணும். அவன் லூட்டி தாங்கமுடியாதது. ஆபத்தானது. எண்ணெய்க் கடாய்.

ஹைமாவதி வேலைக்கு அஞ்சுபவள் இல்லை. அவளுடைய உத்சாகமே அவளைத் தள்ளிக்கொண்டு போய்விடும். எனக்குக் கொஞ்சமாய்ப் பண்ணத் தெரியாது. நிறையப் பண்ணினால் நன்னா அமைஞ்சுடும் பாருங்கோ' என்று ஸ்வால் விடுகிறாள். நீங்கள் ஜாக்கிரதையாய் இருங்கோ. ஞாயிற்றுக்கிழமை டாக்டர் கிடைக்க மாட்டான், தெரியுமோன்னோ?”