பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 43

தான் இருக்க வேண்டும். வார்டுபாய் பெட்பானை' வைத்துவிட்டுப் போய்விடுவான். என்னப்பா இப்படிப் போயிட்டே' என்று ஆட்rே, பித்தால் இதைவிட எமர்ஜென்ஸி கேஸ் ஒண்ணு இருக்கு சார் என்று இளிப்பான். ஸ்பாஞ்ச் பாத் என்று தினம் உடல் துடைப்பான். டாக்டர்கள் வந்து போவார்கள். 'எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு மூடுமந்திரம். இப்படிக் கேட்டு விட்டுப் போவதற்கே பில் 1600ரு ஸர்வீஸ் சார்ஜ்ஜாம். இத்தனை அக்கிரமங்களுக்கு நடுவேயும் நான் மீண்டு விட்டேன். நான் சொஸ்த்தமாகி ஆஸ்பத்திரியை விட்டு மீளும்போது நான்கு டாக்டர்கள் மெனக்கட்டுப் பார்க்க வந்தார்கள். நால்வருமே எனக்குக் கைகுலுக்கினார்கள். “அசாத்திய வில்பவர். அதனால் நீங்கள் இந்த வயதிலும் பிழைத்தீர்கள்” என்று பாராட்டினார்கள். நாம் நம்முடைய பாஷையில் தெய்வக்கிருபை என்போம். அவர்கள் பாஷை யில் அது 'வில்பவர். எனக்கு அப்படித்தான் தோன்று கிறது. நான் பிழைக்கவேண்டுமென்று தனியாய் பிரார்த்திக்க வும் இல்லை. சித்தத்தை திடம் பண்ணவும் இல்லை.

ம் செளக்கர்யக்கின் சாயைகளில் ன்ைறு என் துவு நதாயத ஒன்று g)! கொள்ளலாமா?

அண்ணாவின் (அப்பாவின்) உடம்பை உத்யேசித்து உத்யோக நியமத்தில் எங்கள் குடும்பம் ஐயம்பேட்டை (காஞ்சி) வந்தபோது எனக்கு வயது ஏழு அக்ரஹாரத்தில் நான்கு வருடங்கள் குடியிருந்து விட்டு பிறகு வள்ளுவப் பாக்கத்திற்கு மாறினோம். அங்கிருந்து குருக்கள்மார்கள் குடியிருந்த தூரம் நடைதூரம்தான். அதனால் வைத்தியும் எங்கள் வீட்டிற்கு வருவான். நானும் அங்கு போவேன்.