பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 6;

நீங்கள் என் குழந்தைகள். உங்கள் உளறல்கள் எனக்கு மழலைகள். நான் சந்தோஷப்படாமல் எப்படி இருப்பேன்? அவள் புன்முறுவலை நம் மழலையில் நம்மால் பார்க்க முடியவில்லையா? முடியவில்லையே! 器

முன்னதும் பின்னதுமான நினைவுகள் வருகின்றன. தயங்கிவிட்டுப் போகின்றன- வேறு காr மாற்றத்துக்கு. மேற்கூறிய சர்க்கத்துக்கு முன்னால் ஒரு கட்டத்துக்குப் போகிறேன். போகிறேனா? வருகிறேனா? எனக்குக் குழப்பமாயிருக்கிறது. அப்போது சுந்தரம்மா- வைத்தியின் தாயார் உயிரோடு இருந்தார்.

ஒருநாள் மாலை அம்மா கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு "ராமாமிர்தம், நான் குருக்களாத் துக்குப் போறேன். நீயும் வர்ரையா?”

எனக்கு வலிக்குமா? அவர்கள் வீட்டில் காணாததைக் கண்டமாதிரி வரவேற் றார்கள். மாமியே நேரே வருவது அவர்களுக்கு ராணியே நேரில் வருவது. ஆனால் ராணியை எங்கே பார்த்திருக் கிறார்கள்? அவர்களின் உற்சாகத்திற்கும், பெருமைப் படலுக்கும் ஒரு பேச்சுக்காகச் சொல்லுகிறேன்.

“சும்மாத்தான் வந்தேன். நாம பார்த்து நாளாச்சே! இந்த ஊரிலே நம் மாதிரி பேசிக்க யாரிருக்கா?”

வாஸ்தவம்தான். தங்களைத் தெற்கத்திக்கார மாமி தனக்குச் சமமாக ஏற்றுக் கொண்டதற்கு அவர்களுக்கு அவ்வளவு பெருமை. சந்தோஷம்.