பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7(; -o செளந்தர்ய.

"அப்படி ஒண்ணுமில்லே. அப்பா சுருக்கவே உடம்பை நீட்டிடுவார். அம்மாவுக்கு எனக்கு எடுத்து வெச்சுட்டு காரியத்தை சுருக்க முடிச்சிடுவாள். மோருஞ்சாதத்திலே எடுத்து வைக்க என்ன இருக்கு?

"இங்கே சுண்டைக்காய் வத்தல் குழம்பு, கீரைமசியல் இரண்டுபேரும் சேர்ந்து உட்காருங்கோ போடறேன். இதிலே ஒரு ஆசை”

விசாலம் மறுக்கவில்லை. உடன் உட்கார்ந்து விட்டாள். வைத்தி ஒருகை பிடித்தான்.

“தெற்கத்தி சமையல்- அது தனிதான்.”

“தெற்காவது, வடக்காவது உன் பசிதான். உனக்குத் தெரியவில்லை. வயிறு முதுகுடன் ஒட்டிண்டிருக்கறது. சாப்பிடற வயசில்லையா? உன்னால் முடிஞ்சால், நாளைக் காலை ஒருகட்டு அரைக்கீரை கொடுத்துட்டுப் போ.”

“அதுக்கென்ன? நாளைக்காலை நேரே கீரைப் பாத்தி யிலிருந்து இரண்டு கைகளிலும் மார்போடு அணைத்துக் கொண்டு வந்துவிடுவான். கேட்போரும் யாரும் கிடையாது. இதற்கெல்லாம் கிராமத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் தாம்.”

ä

சிவராத்ரியின் போது கைலாசநாதர் கோயில் அன்னாபிஷேகம். அந்த குருக்களுக்கு வைத்தி உதவிக்குப் போனான். நானும் வேடிக்கை பார்க்கப் போனேன்.

ராப்போது வழக்கமான கால பூஜைகளுக்குப் பிறகு, பத்துமணிக்கு ஆரம்பித்து விடியற்காலை நான்கு நான்கரை வரை அன்னாபிஷேகம் நீடிக்கும். தனித்தனி மண்டகப்