பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 83

வைத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். தூண்களுக்கிடையே இருள் தேங்கிய மருட்சி கண்டு, விளக்குகள் எரிந்து, அணைந்து எண்ணெயில் திரி தீய்ந்து அணைந்த வாசனையை நுகர்ந்து ரொம்ப நாளாச்சு. இதுதான் அசல் கோவில் வாசனை. இவ்வளவு சிறிய கிராமத்திற்கு இந்தக் கோவில் பெரிசுதான். “வெளியில் போய் காட்டட்டுமா? கிராமத்தைப் பார்க்கிறாயா?” என்று வைத்தி கேட்டான். இருக்கும் நேரத்தை இவர்களிடமிருந்து பிரிந்து, வீணாக்க எனக்கு மனமில்லை. ஏதோ சாக்கு சொல்லி நழுவி விட்டேன். வடைபாயசத்துடன் குடிசையுள் தரையில் சூரியனிட்ட நிழல் கோலத்தில் சாப்பாடு. பிறகு Afsörgar– 56bGo 2 på Elb. Fairy land.

எனக்கு இவ்வளவு வயசாச்சு நாள் இவ்வளவு சுருக்கக் கரைந்து போகிறதே என்ற ஏக்கம். கானல் அதிகம் தெரிய வில்லை. நாளைக்கு லீவு போட்டு விடலாமா? சே! எண்ணத்துக்கே இடம் கொடுத்தல் கூடாது. வேலையில் மண் விழுந்து விடும். மஞ்சள் வெய்யல் மெதுவாக சுவரேறி பொன் ஆவது எவ்வளவு அழகாய் இருக்கிறது! விசாலாட்சி அவரைக்காய்களைப் பறிக்கிறாள். கிராமம், கோபுரத்தின் நிழல் இவைகள் கொஞ்சநாளைக்கு மனதிற்கு ஊட்டத்தை யும், ஏக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும்.

விசாலாட்சி உள்ளிருந்து அழைத்தாள். “உள்ளே வாங்க இருட்டிப்போச்சு. நீங்க இனிமே வெளியே தங்கினால் உங்க அம்மா அப்பாவிற்கு நான் ஜவாப் சொல்லணும்.” வைத்தி உள்ளே உட்கார்ந்தபடி புழுங்கினான்: "எனக்கு இந்த இடம் புடிக்கலை, முருகன் கோயில் மாதிரி இல்லை இது. முருகன் என்னை நிச்சயம் அங்கே அழைச்சுப்பான் என்ற நம்பிக்கை யில்தான் நான் இங்கே இருக்கிறேன். எத்தனை அபிஷேகங்கள். எத்தனை அர்ச்சனைகள். நானே இழுத்துப்