பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

செளந்தர கோகிலம்



மாட்டேன் என்கிறார்கள். நாம் இன்னும் நாலைந்து நாளைக்கு இங்கேயே இருக்க வேண்டுமாம். நீ இங்கே இருந்தபடி இவர்களுடைய வண்டியில் ஏறிக்கொண்டு கச்சேரிக்குப் போவ தற்கு எல்லாச் செளகரியங்களையும் செய்து கொடுக்கிறார்களாம். அந்த இடத்தில் திருடர் பயம் அதிகமென்று நான் சொல்லிப் பார்த்தேன். இந்தப் பூஞ்சோலையம்மாளை விட, அவர்களு டைய மூத்த பெண் அதிக யூகமுள்ளதாக இருக்கிறது. இவர்க ளுடைய ஆள்களில் சிலரை அனுப்பி இராத்திரியில் நம்முடைய வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாமென்று அந்தப் பெண் தன்னுடைய அம்மாளுக்கு யோசனை சொல்லிக் கொடுக்கிறது. இவர்கள் நம்மை விடமாட்டார்கள் போலிருக்கிறது. நான் உன் னுடைய பிரியத்தைத் தெரிந்து கொண்டு செல்வதாக சொல்லி விட்டு வந்தேன். நீ என்ன சொல்கிறாய்? இருக்கலாமா போக லாமா?” எனறு நயமாகக் கூற, அதைக்கேட்ட கண்ணபிரான் பருத்திச் செடி வஸ்திரமாகக் காய்த்ததென்று தனக்குள் எண்ணி மிகுந்த களிப்பும், பூரிப்புமடைந்தான். ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "எல்லாவற்றிற்கும் நீங்கள் என்னையே கேட்கிறீர்களே! உங்களுக்குத் தெரியாததற்கு நான் என்ன சொல்லப் போகிறேன். உங்களுடைய பிரியம் எதுவோ, அதுவே என்னுடைய பிரியம். நம்முடைய வீட்டுக்குக் காவல் கூடப் போடுவதாக இவர்கள் சொல்வதைப் பார்த்தால்; இவர்கள் வெறும் வாய் உபசாரம் செய்யவில்லையென்பதும், நாம் இங்கே இருக்க வேண்டுமென்று மனப்பூர்வமாகவே விரும்புகிறார்கள் என்பதும், நன்றாகத் தெரிகின்றன; ஆகையால் எப்படிச் செய்வது உசிதமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே செய்யலாம்" என்றான்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள், தாங்கள் அங்கேயே இருந்து போவதே கண்ணபிரானது விருப்பம் என்று யூகித்துக் கொண்டு, "இவர்கள் அவ்வளவு தூரம் சொல்லும்போது, பிடி வாதமாக மறுத்துவிட்டுப் போவது அழகல்ல; அதனால் இவர் களுடைய மனசு புண்படும். நம்மிடத்தில் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் இவ்வளவு அபாரமான பிரியத்தை வைத்திருக்கும் இந்த அருமையான மனிதர்களுடைய மனம் வருந்தும்படி நாம் செய்தால், அது விசுவாசம் கெட்டவர்கள் செய்யக்கூடிய காரியம்.