பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 93

ஆகையால் இன்று ராத்திரியும் நாளைய பகல் முழுவ தும் இருந்து, நாளைய சாயங்காலம் மறுபடியும் நயமாகக் கேட்டுக் கொண்டு போவோம். நாளைய தினம் மாத்திரம் நீ இங்கே இருந்தபடி கச்சேரிக்குப் போய் விட்டு வந்து விடு' என்று முடிவாகக் கூறினாள்.

அவளது தீர்மானத்தைக் கேட்ட கண்ணபிரானது மனமும், முகமும் சந்தோஷத்தினால் மலர்ந்தன. தனது தாய் செய்த முடிவே சரியான முடிவென்று அவன் உடனே ஒப்புக் கொண் டான். உடனே கற்பகவல்லியம்மாள் அவனை உற்று நோக்கி, "ஏன் தம்பி என்ன உன்னுடைய முகம் வாட்டம் அடைந்தி ருக்கிறது. உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? மத்தியானம் ஏதாவது கொஞ்சம் ஆகாரம் சென்றதா? அவ்வளவு ஜனக் கும்பலில் நான் இங்கே வந்து விசாரிக்கக் கூடாமல் போய் விட்டது. வேண்டுமானால் கொஞ்சம் காப்பியும், பலகாரமும் கொண்டு வருகிறேன். சாப்பிகிடுறாயா?” என்று அன்பாகக்கேட்க, கண்ணபிரான், “எனக்கு ஒன்றும் வேண்டாம்; உடம்பு சோம் பலாக இருக்கிறது; தோட்டத்துக்குள்ளே போய்க் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாகும். நான் போய் விட்டு வருகிறேன். நீங்கள் உள்ளே போய், அவர்களுடைய பிரியப்படி இன்றைய தினம் இங்கே இருப்பதாகச் சொல்லி விடுங்கள்' என்றான்.

உடனே கற்பகவல்லியம்மாள் அவ்விடத்தை விட்டுப் பக்கத்து விடுதிக்குப்போய், அவளது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த பூஞ்சோலையம்மாளை அணுகி, "சரி, தாங்கள் எல்லாரும் இவ்வளவு அந்தரங்கமான பிரியத்தோடு சொல்லு வதைத் தடுத்துவிட்டு வீட்டுக்குப்போக, அங்கே அவ்வளவு அவசரமான காரியம் எதுவுமில்லை. தங்களுடைய பிரியப்படி இன்றையதினம் இருக்கிறோம், நாளைய தினமாவது, எங்களை அனுப்புவீர்களோ மாட்டீர்களோ' என்று நயமாகக் கேட்க, பூஞ்சோலையம்மாள், அவர்கள் இணங்கியதைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தவளாய்க் கற்பகவல்லியம் மாளை நோக்கி, “நிரம்ப சந்தோஷமாயிற்று; இன்றைய தினம் நீங்கள் இருப்பதுதான் இப்போது முதல் காரியம். நாளைய சங்கதியைப் பற்றி நாம் இப்போதே எப்படி முடிவு கட்டுகிறது?