பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 99

பூவில் என்ன சுகம் இருக்கிறது. கோகிலாம்பாளின் முகத்தைப் பார்க்கக் கூடாமல் போய்விட்டதே! அவள் இந்த மாடங்களில் எங்கேயாவது நின்று எனது திருஷ்டியில் படுவாளா என்ற நினைவினால், அந்தப் பூவைப் பறிக்காமல் திரும்பி அந்தக் கட்டிடத்தின் மேன்மாடத்தையும், அதன்மேல் காணப்பட்ட ஏராளமான ஜன்னல்களையும் ஆராயத் தொடங்குவான், அந்த முயற்சியில் ரோஜாப் பூவைப் பற்றிய நினைவே போய்விடும். இடை இடையே மாதுரியமாகக் கூவிய குயிலின் ஒலியில் தனது கவனத்தைச் செலுத்த அவன் முயற்சித்தால் முதல் நாள் கடற்கரையில் கோகிலாம்பாள் பேசிய சொற்கள் அப்போதும் அவனது செவிகளில் கணிர் கணிரென்று புல்லாங்குழலின் ஒசை போல ஒலித்து இன்பத்தைச் சொரிந்து கொண்டிருந்தமையால், மானளலிகமான அந்த இனிய சங்கீதம் அவனது மனதை முற்றிலும் கவர்ந்து கொள்வதால், குயிலின் ஒலி அங்கே உண்டாவதே அவனது மனதில் உறைக்காமல் போய்விடும். அங்கே காணப்பட்ட மாதுளை, மல்கோவா முதலிய பழங்களை அவன் கண்ணால் பார்க்கும்பொழுதே குமட்டல் உண்டாகத் தொடங்கும். அப்படிப்பட்ட பரம சங்கடமான நிலைமையில் அவன் மகா பரிதாபகரமான தோற்றத்தோடு அந்தச் சோலைக் குள் அங்குமிங்கும் அலைந்திருக்க, பொழுதும் கழிந்துகொண்டே இருந்தது. அந்தச் சோலையிலுள்ள எல்லா இடங்களிலும் அவன் போவதும், பார்த்த வஸ்துக்களையே பார்ப்பதும், மகா வேதனையாக இருந்தன. அவ்விடத்தை விட்டு தான் பங்களா விற்குள் போய், புருஷர்கள் இருக்கும் மகாலுக்குப் போனால், தற்செயலாக தான் கோகிலாம்பாளைப் பார்க்க நேராதா என்ற எண்ணமும் நம்பிக்கையும் அவனது மனத்தில் எழுந்து விட்டுத் திரும்பி கட்டிடங்கள் இருந்த திக்கை நோக்கி நடக்கலானான்.

கட்டிடங்கள் சுமார் 100-கஜத்திற்கு அப்பாலிருந்தமையால் அவன் தனது கவனத்தையெல்லாம் வேறிடத்தில் வைத்துக் கொண்டே அந்தக் கட்டிடங்களை நோக்கி நடந்து வந்து கொண் டிருந்தான். அவ்வாறு வந்தவன் திடீரென்று தற்செயலாக மேன் மாடத்தை நோக்க, அவ்விடத்தில் அந்த மடந்தையர் இருவருள் ஒருத்தி நின்று உலாவிக் கொண்டிருந்ததைக் கண்டு சடக்கென்று அங்கேயே நின்றுவிட்டான். அவள் அடி முதல் முடி வரையில்