பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 14i.

நம்முடைய முயற்சியின்றித் தானாகவே வந்து நேர்ந்து விடுகிறது. இதோ இந்தக் கற்பகவல்லியம்மா இருக்கிறார்களே இவர்களுக்கும் எங்களுக்கும் இந்த இரண்டு தினமாகத்தான் பழக்கம். இவர்களுடைய குமாரர்தான் இந்த இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா? அவருக்கு என்னுடைய மூத்த குழந்தை யான கோகிலாம்பாளைக் கட்டிக் கொடுக்க நேற்று இராத்திரி தான் தீர்மானமாயிற்று. புரோகிதர் வந்து நாள் வைத்துவிட்டு இப்போதுதான் புறப்பட்டுப் போகிறார். நாளை தரித்து மறுநாள் காலை பத்து மணிக்கு நிச்சயதார்த்தமும், இன்றைக்கு எட்டாள் நாள் தினம் காலையில் கலியான முகூர்த்தமும் நடக்கப் போகின்றன. சின்னவளான செளந்தரவல்லிக்கும் ஒர் இடம் நிச்சயிக்கப்பட்டுப் போனால், இரண்டையும் சேர்த்து ஒன்றா கவே நடத்தி விடலாம். மனம் போல மாங்கலியம் என்று சொல் லுவார்கள். அதுபோல அவரவர்கள் எதைக் கருதுகிறார்களோ அதுவே அநேகமாக நிறைவேறுகிறது. விதிக்குத் தகுந்தபடி மதியும் இருக்கும் என்பது பொய்யல்ல" என்றாள்.

அந்த வார்த்தையைக் கேட்ட புஷ்பாவதி கிலேசமும் கலக்கமும் அடைந்து, 'அப்படியா மூத்த பெண்ணுக்கு இடம் நிச்சயமாகி விட்டதா என்னுடைய தமயனார் மூத்த பெண் ணைத்தான் கேட்கும்படி என்னை அனுப்பி வைத்தார். இரண்டு பெண்களும், ஒரே மாதிரியாகவும், அழகோடும் இருந்தாலும், மூத்ததுதான் சரியான பக்குவகாலம் அடைந்திருக்கிறது என்றும், இளையது இன்னமும் குழந்தைபோல் இருப்பதால் அதற்குக் கலியாணம் செய்ய இன்னும் சில வருஷ காலம் கழிய வேண்டும் என்றும், என்னுடைய தமயனார் சொன்னார். ஆகை யால், அவருடைய ஆசையெல்லாம் மூத்த குழந்தையின் மேலே தான் ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் எப்ப்டியாவது தயை கூர்ந்து மூத்ததையே எங்களுக்குக் கொடுக்க வேண்டும். இளையதை வேண்டுமானால், இந்த அம்மாளுடைய குமாரருக்குக் கொடுத்து விடுங்கள்' என்று நயமாகவும், குதுரகலமாகவும் புன்னகை செய்தவண்ணம் கூறினாள்.

அதைக் கேட்கவே அங்கிருந்த எல்லோருக்கும் முகம் மாறு பட்டது. பூஞ்சோலையம்மாள் மிகுந்த கிலேசமும் சஞ்சலமும்