உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

செளந்தர கோகிலம்



அடைந்தவளாகக் காணப்பட்டாள். கற்பகவல்லி யம்மாளது முகத்தில் அசடு வழிகிறது. கோகிலாம்பாளது முகம் சுருங்கி அருவருப்பையும், சம்மதமின்மையையும் காட்டியது. அவள் தனது முகத்தைச் சுளித்துக் கொண்டு கீழே குனிந்தாள். செளந்தரவல்லி தனது அக்காளை மாத்திரம் புகழ்ச்சியாகப் பேசி, தன்னை வேண்டாமென்று புஷ்பாவதி தள்ளுகிறாளேயென்ற அதிருப்தியும், சீற்றமும் பொறாமையும் கொண்டவளாய்ச் சடக்கென்று அவ்விடத்தை விட்டு எழுந்து தனது முகத்தை ஒரு திருப்புத் திருப்பிக்காட்டிவிட்டு, அவ்விடத்தை விட்டு, சற்று தூரத்திலிருந்த ஒரு கட்டிலண்டை போய்க் குப்புறப் படுத்துக் கொண்டாள். -

பூஞ்சோலையம்மாள் தனது புதல்வியர் இருவரது மன நிலைமையையும் ஒரே கடினத்தில் யூகித்து உணர்ந்தவளாய் உடனே புஷ்பாவதியை நோக்கி, ‘அம்மா மூத்த குழந்தையின் கலியாணத்துக்கு ஆக வேண்டிய சகலமான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து விட்டோம். அதுவும் தவிர, இந்த அம்மாளு டைய குமாரரைக் கட்டிக்கொள்ள என்னுடைய மூத்த குழந் தையே பிரியப்பட்டதனால், நாங்களும் இந்த ஏற்பாட்டைச் செய்தோம். ஆகையால், குழந்தையின் இஷ்டத்துக்கு மாறாகச் செய்வது உசிதமாகாது. என்னுடைய சின்னப் பெண் தாங்கள் நினைக்கிறபடி அவ்வளவு அறியாத குழந்தையல்ல; இரண்டு பெண்களும் ஒரே தினத்தில் இரட்டையாகப் பிறந்தவர்கள். இருவருக்கும் வயசில் ஒரு நாழிகை காலந்தான் வித்தியாசம். இருவருக்கும் பதினைந்தாவது வயசு முடிந்து, பதினாறாவது வயது நடக்கிறது. அவள் நிரம்பவும் செல்லமாக வளர்க்கப் பட்டவள். ஆகையால், இப்போது குழந்தைபோலக் கபடமில் லாமல் இருக்கிறாள். அவளுக்குக் கலியாணமாகி, அவளும் தன்னுடைய குடும்ப பாரத்தை ஏற்றுக் கொள்வாளானால் அவள் தானாகவே பொறுப்பை உணர்ந்து நடக்கிறாள். ஏதோ எங்களுக்கு ஈசுவரன் கொடுத்த செல்வம் இருக்கிறது. அந்தக் குழந்தை இப்போதே கவலைப்பட்டு வருந்த வேண்டுமா?” எனறாள.

உடனே புஷ்பாவதி, 'அம்மா! தாங்கள் சொல்வது நிரம்பவும் நியாயமான வார்த்தை, பெரிய மனிதருடைய