பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் i43

வீட்டில் செல்லமாக வளரும் பெண்களெல்லாம் இப்படித்தான் குழந்தைபோல இருக்கும். அது வாஸ்தவமான விஷயம். நானும் பதினாலு பதினைந்து வயசு வரையில் இப்படித்தான் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். இப்போது நான் புது மனுஷிபோல மாறிவிட்டேன் என்றும் சொல்லுகிறார்கள். அது போல, எல்லாம் காலக்கிரமத்தில் ஒழுங்குப்பட்டு விடும் என் பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. ஆனால், அதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஆண் பிள்ளைகள் மகா பிடிவாதக் காரர்கள். அதுவும் பெளவனப் பருவத்து ஆண் பிள்ளைகளோ தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிக்கிறவர்கள். விஷயமும் கலியான விஷயமாக இருந்து விட்டாலோ, அவர்களுடைய மனசின் பிடி குரங்கின் பிடியை விட ஆயிர மடங்கு உறுதியானதாக இருக்கும். தாம் பார்த்து ஆசை வைத்த பெண்ணைத்தான் கட்டித் தீர வேண்டும். அந்தப் பெண்ணினி டத்தில் ஆயிரம் குற்றங்களும், கோணல்களும் இருந்தாலும் . அவைகளையெல்லாம், அத்தனை அழகுகளாகவும், சிறப்புக ளாகவும் அவர்களுடைய கண்ணுக்குத் தெரியும். எவ்வளவோ சிலாக்கியமாக இருக்கும் மற்ற எல்லாப் பெண்களும் அவர்களுக்கு இளப்பாகத் தோன்றுவார்கள். இது தங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. என்னுடைய தமயனாரும் இதே கோஷ்டியைச் சேர்ந்தவர். மற்ற எந்த விஷயத்திலும் அவர் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார். இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம், அவர் தகப்ப னாருடைய பேச்சைக் கூட தள்ளிவிடக் கூடிய வணங்கா முடி மன்னர். அவர் அன்றைய தினம் ஜாகைக்கு வந்தது முதல் இதே தியானமாகப் படுத்திருக்கிறார். கட்டினால் தங்களுடைய மூத்த பெண்ணைக் கட்டுகிறது என்றும், இல்லையானால், அப்படியே பட்டினி கிடந்து உயிரை விடுகிறது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் ஏதாவது ஒரு தீர்மானம் செய்து கொண்டால் அதை அப்படியே நிறைவேற்றக் கூடியவர். தாங்கள் இப்போது சொன்ன தீர்மானத்தை நான் உடனே போய் அவரிடம் தெரிவித்தால், அவர் தன்னுடைய பிராணனை விட்டு விடவே முயற்சிப்பார். அப்படி ஒருவர் வதைபட்டு மடிய தங்களுடைய பெண் காரணமாக இருந்தது என்னும் பழியை