பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

செளந்தர கோகிலம்



அவளைத் தூக்கிக் கொண்டு வந்தபோது, அவள் கோகிலாம்பாளோ அல்லது செளந்தரவல்லியோ என்பதை நிச்சயிக்கமாட்டாமல் ஐயமுற்றிருந்த கண்ணபிரானது கவலை நீங்கியது. அவள் செளந்தரவல்லி அல்லவென்ற செய்தி அவனுக்கு நிரம்பவும் ஆறுதலாக இருந்தது. கோகிலாம்பாளோ தனக்கு உரியவள் ஆதலால், வேறே அன்னிய ஸ்திரீயைத் தான் அவ்வாறு கட்டித் தூக்கியதான குற்றம் ஏற்படாது ஒழிந்தது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கியது. அந்த மடமடங்கை சொன்ன சொற்களிலிருந்து அவள் அப்போதும் தனது உண்மையான நிலைமையை உணர்ந்து கொள்ளவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தது. தானே அவளுக்கு நாயகனாக வரிக்கப்பட்டிருந்தும் அவள் தாrணியம் பாராமல் தன்னைக் கடிந்து பேசியதிலிருந்து, அவளது உத்தம குணமும், சுத்தமான நடத்தையும், உறுதியான கொள்கைகளும் பரிஷ்காரமாக வெளிப்பட்டன. அவள் அவ்வாறு அன்பாகக் கடிந்து கொண் டதும் ஒர் அழகாகத் தோன்றிக் கண்ணபிரானது உயிரைக் கொள்ளை கொண்டது. அவன் ஆநந்த பரவசம் அடைந்து, அவளை நோக்கி இனிமையாகப் புன்னகை செய்து, 'பெண்ணே! கோபித்துக் கொள்ளாதே; என்னுடைய உயிருக்குயிராக நினைத்த இரவு பகல் பூஜித்து வரும் என்னுடைய கண்மணி யான உனக்கு நான் அநாவசியமான துன்பம் உண்டாக்கி வைப்பேன் என்று நினைக்காதே; உன்னுடைய உடம்பில் ஒட்டிய ஒரு தூசிக்கும் ஒர் இடுக்கண் வர நான் சகித்திருக் கிறேன் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம். அதோ பார் நீ உட்கார்ந்திருந்த ஊஞ்சற் பலகையின் அடியில் என்ன இருக்கிறது என்பதைக் கவனி?” எனக் கூறிய வண்ணம் தனது கையால் அந்த இடத்தைச் சுட்டிக் காட்ட, சற்று முன் கோகிலாம்பாள் செய்த கூச்சலைக் கேட்டு, அந்த இரை விழுங்கிய நாகப்பாம்பு மிகுந்த பிரயாசைப்பட்டு அப்போதே மெதுவாக நகர முயன்று கொண்டிருந்தது.

கண்ணபிரான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த வியப்பும், திகைப்பும், பிரமிப்பும் அடைந்த கோகிலாம்பாள் தனது முகத்தைத் திருப்பி ஊஞ்சற்பலகையின் கீழே நோக்க, அவ்விடத்தில் நகர்ந்து கொண்டிருந்த பிரம்மாண்டமான