பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

செளந்தர கோகிலம்



தடவிக் கொடுத்தான். அந்தப் பெண்மணியைத் தான் காணக் கிடைக்குமா என்று ஏங்கித் தவித்து உயிர் சோர வருந்தி மன மாழ்கி இருந்த கண்ணபிரானுக்கு அது கனவோ நினைவோ என்ற ஐயம் தோன்றியது. சுவர்க்கலோகமே நேரில் வந்து தன்மீது சாய்ந்திருப்பது போல, அழகே மயமாகவும், இன்பமே நிறை வாகவும், அற்புத தேஜஸோடு தனது மார்பின் மீது சாய்ந்திருந்த அந்த மடமயிலைப் பார்க்கக் கண் கூசியது. ரோஜாப்பூவின் இதழ்போல மிருதுவாகவும் குளிர்ச்சியாகவும், வழுவழுப்பாகவும் இருந்த அந்த மடமங்கையின் உடம்பு, கண்ணபிரானது உடம்பில் படப்பட மயிர்க்காலிற்கு மயிர்க்கால், பிரம்மாநந்த சுகம் ஊறி அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் பரவுகிறது. ஜில் ஜில்லென்று மயிர்ச் சிலிர்க்கிறது. அவனது மனதில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்து கரைபுரண்டோடி வழிகிறது. தேகம் பரவசம் அடைந்து வெட வெட என்று ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறது. வேறே யாராகிலும் அப்போது வந்து தங்களைப் பார்த்துவிடப் போகிறார்களோ என்ற அச்சம் எழுந்து ஒருபுறம் வதைக்கிறது. ஏதோ ஒரு பெருத்த குற்றம் செய்து விட்டவனது உடம்புபோல, அவனது ஆழகிய சரீரம் அடிக்கடி திடுக்கிடுகிறது. அவன் தனது முகத்தை நாற் புறங்களிலும் திருப்பித் திருப்பி பார்க்கிறான். உடனே குனிந்து, கோகிலாம்பாளது சுந்தரவதனத்தைக் கண்ணுற்று மயங்கிப் பிரமித்து உணர்வு கலங்கி உருகி ஒய்ந்து, 'கோகிலா! கோகிலா! பாம்பை அடித்துக் கொன்றுவிட்டேன்; பயப்படாதே கண்ணை விழித்துப் பார்” என்று கொஞ்சிக் கெஞ்சி நயமாகக் கூறித் தனது கையாலும் ஈர உருமாலையாலும் அவளது வதனத்தை வருட, கால் நாழிகையில் அவளது முகத்தில் தெளிவும் களையும் காணப்பட்டன. அவள் உடனே தனது கண்ளைத் திறந்து பார்க்க அவர்களது கண்கள் இரண்டும் ஒன்றையொன்று சந்தித்து உறவாடின. அவள் தனது மனத்தில் பொங்கியெழுந்த நன்றியறி தலின் வெள்ளத்தையும், வாஞ்சைப் பெருக்கையும், காதலின் நிறைவையும், தனது கண்களின் இளக்கத்தாலும், ஜ்வலிப்பி னாலும் நன்றாக வெளிப்படுத்தி நாணமும், அச்சமும் கொண்ட வளாய்ச் சிறிது நேரம் தத்தளித்திருந்த பின், தனது வாயைத் திறந்து மிருதுவாகப் பேசத் தொடங்கினாள். அவளது குரல்