பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 171

புல்லாங்குழலின் கனிந்த ஒசை போலவும், அமிர்த வருஷம் போலவும், இன்பத்தை அள்ளி இறைத்தது. “அன்றைய தினம் தாங்கள் என்னுடைய உயிரையும், என் தங்கையின் உயிரையும் காப்பாற்றியதற்குப் பாத காணிக்கையாக நான் என்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் ஏற்கனவே தங்களுக்குத் தத்தம் செய்து விட்டேன். இப்போது இந்த இரண்டாம் முறை என்னுடைய உயிரைத் தாங்கள் காப்பாற்றியதற்கு நான் வேறே எதைத் தங்களுக்குப் பாத காணிக்கையாகக் கொடுக்கப் போகிறேன்! எனக்கென்று எந்தப் பொருளும் இல்லாமல் நான் தங்களுடைய அடிமையாக இருக்கிறேன். இனி எல்லாம் தங்களுடையதே' என்று நிரம்பவும் கனிவாகவும் உருக்கமாகவும் வாஞ்சையாகவும் கூறியவண்ணம் மெல்ல நிமிர்ந்து உட்கார, அவளது சொற்களைக் கேட்ட கண்ணபிரான் அப்படியே பிரமித்துப் போனான்; அவள் கோடீசுவரரது பெண் ஆதலாலும், தான் பரம ஏழை ஆதலாலும், அவள் தன்னை அவ்வளவாக மதிக்காமல் அமர்த்தலாய்ப் பேசுவாளோ என்றும், அதனால் தனது மனம் சங்கடப்பட நேருமோ என்றும் மிகுந்த ஐயமும் கவலையும் கொண்டு நிரம்பவும் அஞ்சி அஞ்சி அவளிடத்தில் பேசின. கண்ணபிரான், அவளது பணிவையும், பயபக்தி விநயத்தையும், அவள் தன் மீது கொண்டிருந்த காதலின் வலுவை யும் கண்டு ஆனந்த பரவசம் எய்திப் பூரித்து புளகாங்கிதம் அடைந்து, அது உண்மையில் நிகழும் காட்சியோ, அல்லது தான் சதாகாலமும் அதே நினைவாக இருப்பதால் உண்டான மானஸிகமான பொய்த் தோற்றமோ என்று இரண்டு நிமிஷ நேரம் சம்மயத்தவனாய்த் தன் மீது இன்பகரமாகச் சாய்ந்திருந்த அந்த மனோ மோகன வடிவழகியை உற்று நோக்கினான். தனது கண்ணின் திருஷ்டி தோஷம் அவளுக்கு ஏற்படுமோ என்ற எண்ணத்தினால் அவளை நன்றாகப் பார்க்கவும் அஞ்சினான். அவ்வளவு பெருத்த கோடீசுவரரது வீட்டுப் பெண்ணாகிய அந்த சுவர்ணபிம்பம் மகா ஏழையான தனது மனைவி என்று நினைக்கவே அவனது மனம் இடங்கொடுக்கவில்லை. அப்படிப் பட்ட சுவர்க்கலோகம் தனக்கு உரியதாவதற்குள் வேறே யாரா கிலும் முயற்சிப்பதனால் அது தனக்கில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் தோன்றியது. அவ்வாறு பிறவிக் குருடன் கண்