பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

செளந்தர கோகிலம்



பெற்று, உலகத்தின் அற்புத விநோதங்களைக் கண்டு, ஒரு கால் மறுபடியும், தனது கண்பார்வை மறைந்து போய்விடுமோ என்று அடிக்கடி சந்தேகித்துக் கவலையும் சஞ்சலமும் கொள்வது போல, கண்ணபிரான் தான் கோகிலாம்பாளையும் அவளது செல்வங் களையும் அடையும்படியான பாக்கியம் எவ்வித இடையூறுமில் லாமல் முடிவு வரையில் சித்திக்க வேண்டுமே என்று கவலை கொண்டு அப்போதே உருகலானான். அவளது தேகம் தனது உடம்பில் படுவதால் உடம்பில் பரவிய பேரின்ப சுகமும், அவளது கண்கொள்ளா அழகைப் பார்த்ததால் அவனது மனதில் பொங்கியெழுந்த குதுகல வெள்ளமும் ஒன்று கூடி, அவனை மெய்ம்மறந்து போகச் செய்யவே, அந்த ஆவேசத்தில் அவன் தனது மோகலாகிரி முழுவதையும், ஆசையையும் நன்றாகப் பலப்படுத்தி, அவளது சுந்தரவதனத்தைத் திருப்பி வாய் ஒயாமல் நன்றாக அவளது கன்னங்களிலும், அதரங்களிலும் பன்முறை முத்தமிட, அந்த இன்பத்தைத் தாங்கமாட்டாத பெண்மணி, அந்த மன்மத புருஷனது வசீகரமான முகத்தின் அழகினால் கவரப்பட்டவளாய்த் தன்னை மறந்து தனது கைளைக் கொடுத்து அவனது முகத்தைப் பிடித்து அப்படியே தனது முகத்தோடு சேர்த்து அசையாமல் அழுத்திக் கொள்ள, இரண்டு முகங்களும் ஒன்றோடொன்று ஒட்டி ஐக்கியமடைந்து அரை நாழிகை வரையில் அதே நிலைமையில் இருந்தனர். அவர்கள் இருவரும் சுவர்க்க லோகத்திற்குள் நுழைந்து தேவாமிருத விருந்து உண்பவர்போல அப்படியே ஆநந்த மயமாக இளகிக் கனிந்து நைந்து நெக்கு நெக்குருகி இருக்க, ஈருயிரும் ஒருயிராகி ஒன்று பட, மயிர் சிலிர்த்துத் தாண்டவமாட, தேகம் பூரித்துப் பரவசம டைய, ஐம்புலன்களும் நெஞ்சமும் சலனமற்று இன்ப வெள்ளத் தில் தோய்ந்து தம்மையும் உலகையும் சகலத்தையும் மறந்து ஒப்புயர்வற்ற மோஷ நிலையை அடைந்து நிற்க, அந்த சொற்ப நேரத்திற்குள் அவர்களது இரண்டு மனதுகளும் ஒன்று பட்டுப் போயின. அவர்கள் இருவரது ஜீவன்களும் விலக்க முடியா வகை யில் ஒன்றிற்குள் ஒன்று நுழைந்து புகுந்து கொண்டன. ஆதலால் அதன் பிறகு எத்தனை யுகங்களானாலும் எவ்விடத்திலிருந்தாலும், ஒருவரை ஒருவர் விலக்கவாகிலும், மறக்கவாகிலும் முயல்வது சிறிதும் சாத்தியமில்லாத வகையில் எங்கும் நிறைந்த கடவுளும்