பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 183

உனக்கு இல்லையா? அக்காள் அப்படி இருக்கையில் தங்கையும் இப்படித்தான் இருப்பாள் என்று, அவர்கள் எல்லோரைப் பற்றியும் கெடுதலாக நினைத்துக் கொள்ள மாட்டார்களா? அதற்கெல்லாம் இடம் கொடுப்பது சரியல்ல. போகலாம்; கொஞ்சம் நில் அம்மா’ என்று நயமாகவும் அழுத்தமாகவும், உருக்கமாகவும் கூறி வேண்ட, எதிர்பாராத வார்த்தையைக் கேட்ட செளந்தரவல்லி சடக்கென்று நின்று திரும்பி நிரம்பவும் அருவருப்பாகக் கண்ணபிரானைப் பார்த்தாள்.

அவளது மனதைச் சமாதானப்படுத்த அதுதான் சரியான பக்குவ சமயம் என்று எண்ணிக்கொண்ட கண்ணபிரான் அவளை நோக்கி இனிமையாகப் புன்னகை செய்து, 'நில் குழந்தை! போகலாம். என்மேல் கூட உனக்கு அதிகமான கோபமும், அருவருப்பும் உண்டாகியிருப்பது உன்னுடைய முகப்பார்வை யிலேயே நன்றாகத் தெரிகிறது. என்னை நீ எவ்வளவு தூரம் கோபித்துக் கொண்டாலும், வைதாலும், அடித்தாலும், நான் அவைகளையெல்லாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்; ஏனென்றால் நானாவது கொஞ்சத்தில் கொஞ்சம் குற்றம் செய்திருக்கிறேன். உன்னுடைய அக்காள் ஒரு பாவத் தையும் அறியாத நிரபராதி; அவள் மேல் நீ காரணமில்லாமல் கோபித்துக் கொள்ளுவதுதான் உன்னுடைய புத்திசாலித் தனத்துக்கு அழகானதல்ல. ஏதோ வந்தாய்! இவள் என் மடியில் சாய்ந்திருக்கக் கண்டாய் அதிலிருந்து என்னென்னவோ தவறான சங்கதிகளையெல்லாம் நீயே யூகித்துக் கொண்டாய். ஒருவன் நூறு மனிதருக்கெதிரில் கொலை செய்திருந்தாலும், அவனை நியாயஸ்தர் உடனே தண்டித்து விடுகிறதில்லை. அவன் என்ன சமாதானம் சொல்லுகிறான் என்பதை நிதானமாகக் கேட்டு, அவனுடைய சாட்சிகளையெல்லாம் விசாரித்து அதற்கு மேல், அவசியமானால் தண்டனை விதிக்கிறார்கள். அப்படி இருக்க, நாங்கள் என்ன பெருத்த கொலை குற்றம் செய்து விட்டோம்? நாளைக்கு உனக்கு ஒரு புருஷர் நிச்சயமாகிவிட்டால், நீங்கள் இருவரும் இப்படி இருந்துதான் சந்தோஷப்படப் போகிறீர்கள்; நீங்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் கலியாணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அது இனி மாறப் போகிறதில்லை. உன்னுடைய அக்காள் வேறே அன்னிய