பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

செளந்தர கோகிலம்



இருக்காது; உன்னுடைய அக்காள் இங்கே வந்திருந்தது எனக்குத் தெரியாது. நான் தற்செயலாகத் தோட்டத்துக்குள் வந்து உலாவிக் கொண்டே இந்த இடத்துக்கு வந்தேன்; அப்போது உன் னுடைய அக்காள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து எங்கேயோ கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய காலுக்குக் கீழ் தரையில் இந்தப் பாம்பு வந்து படுத்துக் கொண்டிருந்தது. நான் தூரத்திலிருந்து குரல் கொடுத்தால், அவள் திடுக்கிட்டெழுந்து பாம்பின்மேல் காலை வைத்து விடப் போகிறாளோ என்ற பயம் உண்டாகிவிட்டது. நான் ஊஞ்சல் பலகைக் கிட்டப் போனால், பாம்பு என்னைக்கடித்து விடுமோ என்ற பயம் உண்டானதா னாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய உயிர் போனாலும் போகட்டும், கோகிலாம்பாளுடைய உயிர் மட்டும் போகக் கூடாது என்ற உறுதியை மனசில் வைத்துக் கொண்டு, நான் விரல்களை ஊன்றி நடந்து போய், கோகிலாம் பாளை அலாக்காகத் துக்கிக் கொண்டு வந்து இந்த இடத்தில் சேர்த்தேன். பாம்பு கிடந்ததனால் நான் அப்படிச் செய்தேன் என்பது கோகிலாம்பாளுக்கு அப்போது தெரியாது. ஆகையால், அவளும், நீ இப்போது கோபித்துக் கொள்வதற்கு மேல் பத்துப் பங்கு அதிகமாகவே என் மேல் கோபித்துக் கொண்டாள். உடனே நான் அந்தப் பாம்பைக் காட்டினேன். அது அப்போது மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் இவள் கிலியினால் ஸ்மரணை தப்பிக் கீழே விழுந்து விட்டாள். நான் உடனே ஒடிக் கல்களை எடுத்தெறிந்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்று விட்டு வந்து துணியை நனைத்துக் கொண்டு வந்து இவளுடைய முகத்தில் தடவி மூர்ச்சையைத் தெளிவித்தேன். அப்படித் தெளிய வைக்கும்போது, இவளை மடியில் சாத்தி வைத்துக் கொள்வது கட்டாயமாகி விட்டது. கொஞ்ச நேரத்தில் இவள் கண்களை விழித்துக் கொண்டாள். நான். இங்கே வந்த சுமார் 10 நிமிஷங்கூட ஆகவில்லை. அன்றையதினம் மோட்டார் வண்டி விடத்திலிருந்தும், இன்றைய தினம் பாம்பின் வாயிலி ருந்தும் தப்பிப் பிழைத்தாளே என்ற ஒரு விசனத்தினாலும், பரிவினாலும், நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. என்னைக் கட்டிக்கொள்ளப் போகிற பெண்ணாகிய இவள் இப்படி இரண்டு தரம் எமன் வாயிலிருந்து தப்பிப் பிழைத்