பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 189

தவறான காரியத்தைச் செய்யமாட்டேன் என்ற உறுதி அம்மா ளுக்கு எப்போதும் உண்டு. என் தங்கைக்குக் கொஞ்சம் பொறா மையும், பிடிவாதமும் உண்டு. ஆனால், நகை, புடவை, சாமான் கள், தின்பண்டங்கள், சொத்து, சுதந்தரங்கள் முதலிய மற்ற விஷயங்களால் இருந்தால் நான் இவளுடைய பிடிவாதத்துக்கு இடங்கொடுப்பேன். எனக்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று எல்லாவற்றையும் இவளுக்கே நான் கொடுத்து விடுவேன். நான் என்னுடைய புருஷனோடு சந்தோஷமாக இருப்பதைப் பற்றிக் கூட அவள் பொறாமைப் பட்டால், அதற்கு நான் இடங்கொடுக்க முடியுமா? இவள் ஒன்றும் தெரியாத குழந்தை; என்ன செய்கிறது! இன்னும் சொற்ப காலத்துக்கு இவள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கட்டும். இவளுக்கும் அதி சீக்கிரத்தில் ஒரு கலியாணத்தைச் செய்து விட்டால், அதன் பிறகு இவள் இந்த விஷயத்தில் பொறாமைப்பட மாட்டாள். தாங்கள் எவ்வளவோ பணிவாகவும் இவளை உயர்த்திப் பெருமைப்படுத்தியும் பேசுகிறீர்கள். அதை வகித்துக் கொள்ள இவளுக்கு யோக்கியதை இல்லாமல் போய்விட்டதே. தாங்கள் என்னுடைய உயிரை இரண்டு தரம் காப்பாற்றி இருக்கிறதை தெரிந்து கொண்டும், நாளைக்குத் தாங்கள் என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்பதை உணர்ந்தும், நான் யாரோ அன்னியனிடத்தில் துன்மார்க்கமான காரியம் செய்துவிட்டதுபோல இவள் பேசுகிறாள் இருக்கட்டும். இவள் பேசுவதற்கும் கேவலம் ஒரு குழந்தை பேசுவதற்கும் எவ்வித பேதமுமில்லை. ஆகையால், இவள் சொன்ன வார்த்தை எதையும் தாங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்; நான் இந்த விஷயத்தில் தங்களிடத்தில் அதிருப்தியாவது அருவருப்பாவது கொள்ளப்போகிறேன் என்ற கவலையும் தங்களுக்கு வேண்டாம். நல்ல சமயத்தில் இவளைத் தாங்கள் நிற்கச்செய்து விஷயங்களை எல்லாம் பக்குவமாக எடுத்துக் சொல்லி முக்கியமான விஷயத்தில் என்னுடைய மானத்தைக் காப்பாற்றினர்களே; அது ஒன்றே கோடி பெறும். என்னுடைய உயிரைத் தாங்கள் இரண்டு தடவை காத்த உதவியோடு கூட, இந்த மூன்றாவது உதவியை யும் நான் என் மனசில் எப்போதும் வைத்து அந்த நன்றியையும்