பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

செளந்தர கோகிலம்



மறக்க மாட்டேன் என்பது நிச்சயம். நான் இனிமேல் நிற்பது சரியல்ல. இவள் போய் அம்மாளிடத்தில் எதைச் சொன்னாலும் இவளுடைய கட்சி ஓங்காது. ஆனால் மற்ற மனிதர்கள் இருக்கையில் இவள் இதை வெளியிட்டாலும் வெளியிடலாம். அப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆகையால், நான் இவளுக்கு முன் வேகமாகப் போய்ச் சேர வேண்டும். உத்தரவு கொடுங்கள் தாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவே தேவையில்லை. நாளையதினம் முழுவதும் ஜனங்கள் இருப்பார்கள். மறுநாளைய காலைக்குள் எல்லோரும் போய்விடுவார்கள். அன்றைய தினம் நானும் தாங்களும் மறுபடியும் ஒன்றாகச் சந்தித்து நான்கு நாழிகை நேரமாவது எவ்வித இடையூறுமில்லாமல் சந்தோஷமாகப் பேசிக் கொண் டிருக்க வேண்டும். நம்முடைய பங்களாவில் மூன்றாவது மாடி யில் தனியான ஒர் அறை இருக்கிறது. அங்கே வந்து நான் தங்க ளைச் சந்திக்கிறேன். எப்போது என்பதை யார் மூலமாவது தங்க ளுக்குச் சொல்லி அனுப்புகிறேன். தாங்கள் வராமலிருந்து விடக் கூடாது. நாளைய தினம் முழுதும் நான் தங்களைப் பார்க்காமல் எப்படி இருக்கிறதென்று விசனம் இப்போதே என்னை வதைக்கிறது. ஆகையால், மறுநாளின் வரவை நான் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்’ என்று நிரம்பவும் உருக்கமாகவும் பணிவாகவும் கூறித் தனது காதல் முழுவதையும் தனது முகத்தோற்றத்தால் ஏற்படுத்தி நிரம்பவும் பரிதாபகரமாக அந்த யெளவனப் புருஷனை நோக்க, கனியோ, பாகோ, கற் கண்டோ, அமிர்தமோ எனக் கர்னாமிருதமாக அந்த மின்னாள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட கண்ணபிரான் ஆநந்த பரவசம் அடைந்து நெக்கு நெக்குருகி ஆசையோடும், ஆவலோடும் அவளை இழுத்துக் கட்டியனைத்து முத்த மழை பெய்து பத்து நிமிஷ நேரம் வரையில் அதே நிலையில் ஒருமித்து நின்றபின், மிகுந்த விசனத்தோடு அவளுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு, அவ்விடத்தை விட்டு அடிமேல் அடி வைத்து வேறொரு திக்கை நோக்கி நடக்கலானான். அவ்வாறு நடந்த கண்ணபிரான் மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்தவனாய் நெடு நேரம் வரையில் அந்தப் பூஞ்சோலையிலேயே உலாவிக்கொண்டிருந்தான்; அவனது சரீரம் மண்ணிலிருந்ததோ விண்ணிலிருந்ததோ என்பது