பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 191

தோன்றாத மெய்ம்மறந்த நிலைமையில் அவன் சிறிது நேரத் திற்கு முன் நிகழ்ந்த சம்பவத்திலேயே தனது முழுக் கவனத் தையும் செலுத்தியவனாக நடக்க, அவனது நிலைமை இன்பமும், துன்பமும் கலந்ததான சகிக்க இயலாத நிலையாக இருந்தது; கோகிலாம்பாளை எப்போது காணப்போகிறோம் என்றும், அவளோடு எப்போது பேசப்போகிறோம் என்றும் நினைத்து ஏங்கித் தவித்திருந்த சமயத்தில், நிரம்பவும் ரகஸியமும் ரமணிய முமான இடத்தில், அவளைத் தான் கண்டு, பிரான அபாயமான ஒர் விபத்திலிருந்து அவளைத் தப்புவித்த ஏதுவினால், அவளது ஆலிங்கன சுகமும், அவளது அதிமாதுரியமான காதற் கனிமொழி களைக் கேட்டதான பேரின்பமும் அடைந்து தெய்வத்தின் இன்னருளால் தனக்கு ஏற்பட்ட பெருத்த பாக்கியமாகவும், தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும், ஆயிரம் மடங்கு அதிகமாக அதிர்ஷ்டமாகவும் தோன்றின. அவளை நினைக்க நினைக்க கடவுள் தன் விஷயத்தில் தோன்றாத் துணைவராக இருந்து ஏதேதோ சம்பவங்களைக்காட்டி, தனக்கு ஏராளமான நன்மை களைச் செய்துகொண்டே போகிறார் என்பது அவனுக்கு நன் றாகப் புலப்பட்டது. ஆகவே, அவனது மனம் கடவுளை நினைத்து மிகுந்த பயபக்தி விசுவாசத்தையும் உருக்கத்தையும் கொண்டது. தான் கோகிலாம்பாளிடத்தில் நெருங்கி இருந்து அவளால் கொடுக்கப்பட்ட சுகத்தை அநுபவித்து சொற்ப நேர காலமேயானாலும், அந்தப் பிரமாநந்த சுகம், அவனது ஆயுட் காலம் வரையில் மறக்கக்கூடாத பரம சுகமாகவும், அப்போதும் அவனது மனத்திலும் ஐம்புலன்களிலும் இன்ப ஊற்றைச் சுரக்கச் செய்து கொண்டிருந்த நித்தியானந்த சுகமாகவும் இருந்ததன்றி, அவளது இனிய வடிவமும், கலியான குணங்களும் அவனது அகக் கண்ணில் மறையாமல் புலப்பட்டு அவனை எப்போதும் அமிர்த சாகரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. ஆனால், தான் அனுபவித்த பரமசுகத்துக்கு இடையூறாக செளந்தரவல்லி யம்மாள் திடீரென்று தோன்றியதும், தங்கள் இருவரது மனமும் புண்படும்படி கன்ன கடுரமான சொற்களைப் பேசிவிட்டுப் போனதும், அதுவரையில் தாங்கள் அனுபவித்த சுவர்க்க போகம் சடக்கென்று கெட்டுப்போய், தாங்கள் பெருத்த அவமானமும், சஞ்சலமும் அடைய நேர்ந்ததும் அவனுக்கு ஒருவித அபசகுனம்

«à