பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

செளந்தர கோகிலம்



கொண்டு, ராஜரத்தின முதலியாரது பங்களாவில் சயனித்திருந்த ஜனங்கள் எல்லோரையும் தட்டி எழுப்பினான். பங்களாவைச் சேர்ந்த மனிதர்களும், விருந்தினருமான எல்லோரும் அதிகாலை யில் எழுந்து தத்தம் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு அழ காகவும், பகட்டாகவும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். எவரைப் பார்த்தாலும் பட்டு ஜரிகை, வைரம், கெம்பு முதலிய வைகளே நிறைந்தவர்களாகத் தோன்றினர். அந்தப் பங்களா விற்குள் இருந்த சுவர்கள், கம்பங்கள், கூரைகள், நாற்காலி, மேஜைகள், ஸோபாக்கள், மரங்கள், பூஞ்செடிகள், பந்தல்கள் முதலிய சகலமான வஸ்துக்களும் தோரணங்களாலும், தொங்கல்களாலும், கூந்தல்களாலும், அஸ்மானகிரிகளாலும் வேறு பலவகையான சிங்காரப் பொருட்களாலும் தங்களை அதி விநோதமாக அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஒரு புரத்தில் இரட்டைத் தங்க நாகசுரங்களோடு கூடிய மேளக் கச்சேரி ஜாம் ஜாமென்று முழங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் முதல் தரமான பாண்டுவாத்தியக்காரர்கள் பாகோ, தேனோ, அமிர்தமோ எனக் கீர்த்தனைகளையும், இந்துஸ்தானி கெஜல் களையும் எடுத்து அதுமாதுரியமான ஜிலீர் ஜிலீரென்று அள்ளி இரைத்து எல்லோரது மனத்தையும் உருக்குகிறார்கள். கலியாணத் திற்காக அமைக்கப்பட்டுள்ள சிங்காரக் கொட்டகைப் பந்தலில் ஒரு சுமார் ஆயிரம் விருந்தினர் ஜெகஜ்ஜோதியான ஆடை ஆபர னங்களோடு உட்கார்ந்திருக்கின்றனர். மோட்டார் வண்டி களும், ஸாரட்டுகளும், குதிரைவண்டிகளும் புதிய புதிய விருந்தி னரைக் கொணர்ந்து சேர்த்து விட்டு வழி நெடுக அரை மயில் தூரம் வரையில் இரட்டை வரிசைகளாக நிறுத்தப்படுகின்றன.

அப்போது கண்ணபிரான் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல் பெறத்தக்க வைர ஆபரணங்களையும், ஜரிகைப் பட்டாடை களையும் அணிந்து இராஜ்ய பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாக வந்திருக்கும் ராஜகுமாரனோ, அல்லது, ரதி தேவியை மணக்க வந்திருக்கும் மாரவேளோ என எல்லோரும் மயங்கி வியப்பும் பிரமிப்பும் அடைந்து, அவனது அதி அற்புத தேஜசைக் கண்டு, “ஆகா! இப்படிப்பட்ட சிலாக்கியமான மாப்பிள்ளையை நாம் இதுவரையில் பார்த்ததே இல்லை. கலியானப் பெண் முன் ஜென்மத்தில் நல்ல பூஜை செய்தவள்’ என்று தங்களுக்குள்