பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 195

அவன் வந்து விட்டான் என்ற செய்தி எட்டுகிற வரையில் பூஞ் சோலையம்மாள், கற்பகவல்லியம்மாள், கோகிலாம்பாள் முதலியோர் தீயில் விழுந்த புழுவெனத் துடிதுடித்து நின்றனர். தென்னஞ்சோலையிலிருந்த அவனை வேலைக்காரர்கள் அழைத்து வந்து வெள்ளி மணையில் உட்காரவைத்து விட்டார் கள் என்ற செய்தியைக் கேட்டவுடனே, அவர்களது முகங்கள் எல்லாம் சூரியனைக் கண்டு மலரும் தாமரை மொட்டுகள் போல மகிழ்ச்சியினால் விரிந்தன. இலைகளில் உட்கார்ந்திருந்த பெண் விருந்தினர்களுக்கு எல்லாம் அவர்கள் யாவரும், பந்தி விசாரணை செய்வதில் தங்களது கவனத்தைச் செலுத்தலாயினர். அன்றைய விருந்து ஆண் பெண் பாலரான விருந்தினர் பணிமக்கள் முதலிய எல்லோருக்கும் நிரம்பவும் சம்பிரமமாக நடந்தேறியது. கண்ணபிரானும், மூன்று நாட்களிற்குப் பிறகு அப்போதே திருப்தியாக விருந்துண்டான். கோகிலாம்பாளைக் கண்டு அவளோடு பேசி அவளது ஆலிங்கன சுகத்தை அனு பவித்ததனால், அவனது மனம் எப்படி பிரம்மாநந்தமே மயமாக நிறைந்திருந்ததோ, அதுபோல அவனது வயிறும் நல்ல மாதுரிய மான அறுசுவை பதார்த்தங்களும் பக்ஷண பாயாசங்களும் கனி வர்க்கங்களும் நிறைந்து குளிர்ந்து திருப்தியடைந்திருந்தது.

போஜனம் நிறைவேறிய பின் விருந்தினர் எல்லோரும் தாம்பூலந் தரித்து நெடுநேரம் வரையில் குது.ாகலமாகச் சிரித்து விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்து தங்கள் தங்களுக்கு வசதியான இடங்களில் போய்ச் சயனித்துக் கொண்டனர். அவ் வாறே கண்ணபிரானும் தான் முதல்நாள் சயனித்திருந்த சொகு ஸ்ான மஞ்சத்தில் படுத்து இந்த இரவு முழுவதும், கோகிலாம் பாளும் தானும் கூடிக் கலந்து சந்தோஷமாக பூங்காவில் இருப்பதாக இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தான்.

அவ்வாறு இரவு கழிந்தது; நிச்சயதார்த்த தினம் வந்து சேர்ந்தது. முதல்நாள் இரவில் நடந்த மகா சிலாக்கியமான விருந்திற்குத் தன்னை அழைக்காமல் தான் இல்லாத காலத்தில் அவர்கள் அதை நடத்தி விட்டார்களே என்ற் கடுங்கோபத்தோடு எழுபவன்போல சூரிய பகவான் கீழ்த்திசைக் கடலிலிருந்து கண் விழித்தெழுந்து அதி உக்கிரத்தோடு கிளம்பி ஆயிரங் கரங்கள்