பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

செளந்தர கோகிலம்



புது மாப்பிள்ளைக்குப் போடப்பட்ட தலைவாழை இலை சகலமான பரிபக்குவ பதார்த்தங்களாலும் நிரப்பப் பெற்றி ருந்தது. ஆனாலும், அதற்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த வெள்ளி மணைப்பலகை வெற்றுப் பலகையாக இருந்ததைக் கண்ட பணிப்பெண்களும், விருந்தினரும், 'மாப்பிள்ளை எங்கே? மாப்பிள்ளை உட்காரவில்லையே! மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துக் கூப்பிடுங்கள்’ என்று கூக்குரலிடலாயினர். அந்தச் செய்தி பூஞ்சோலையம்மாள் முதலியோருக்கு விடுதிக்கு எட்ட, அவர்கள் லாந்தர்களை எடுத்துக் கொண்டு உத்யான வனத்திற்கு போய்த் தேடும்படி பல ஆட்களை அனுப்பி விட்டுத் துடிதுடித்து நின்றனர். அந்த ஆட்கள் பூங்காவின் ஆரம்பத் திலிருந்த தென்னை மரங்களின் வழியாகத் தேடிக்கொண்டே செல்ல, அவ்விடத்தில் மிகுந்த சஞ்சவத்தோடு உலாவிக் கொண் டிருந்த கண்ணபிரான், குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் என்பதற் கிணங்க, செளந்தரவல்லியம்மாள் கலகத்தீ மூட்டியதனால் ஏதேனும் துன்பம் சம்பவிக்கப் போகிறதோ என்ற கவலை கொண்டு அச்சத்தோடு அந்த ஆட்களை நோக்க, அவர்கள், "இலை போட்டாய்விட்டது. எல்லோரும் உட்கார்ந்து கொண் டார்கள். மாப்பிள்ளை இந்த இருட்டு வேளையில் கூடவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருகிறது? பூச்சிப்பொட்டு முதலிய ஜெந்துக்கள் இருக்குமே; வாருங்கள் போஜனத்துக்குக் கூப்பிடுகிறார்கள் தங்களைக் காணாமல், எஜமானியம்மாள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் சாமீ!' என்று அன்பாகக் கனிந்து சந்தோஷத்தோடு பணிவாக வருந்தி அழைத்தனர்.

அப்போதே கண்ணபிரானது சந்தேகமும், கலவரமும் நீங்கின. கோகிலாம்பாள் போய், செளந்தரவல்லி தங்களைப் பற்றி எந்த விஷயத்தையும் வெளிப்படுத்தாமல் செய்து விட் டாள் என்று நினைத்து துணிபடைந்த அந்த யெளவனச் சிறுவன், "இலை போட்டுவிட்டார்களா? அப்படியானால், இதோ வந்து விட்டேன். எனக்குப் பசி இல்லாதிருந்தது. கொஞ்ச நேரம் உலா வினால், பசி உண்டாகுமென்று நினைத்து இங்கே இருந்தேன்' என்று அவர்களுக்கு மறுமொழி கூறிய வண்ணம் அவர்களோடு கூடத் தொடர்ந்து சென்று போஜனசாலையை அடைந்தான்.