பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 225

தெரிவித்தான். அதைக் கேட்டவுடனே என் மனம் தாளவில்லை. உடனே புறப்பட்டு இங்கே ஒடி வந்தேன். நீர் இந்தக் கலியான கோலத்தோடு இப்படி அடைபட்டிருப்பதைப் பார்க்க எனக்கு நிரம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அதோடு நீர் காலை முதல் சாப்பிடாமல் சோர்ந்து வாடி இருப்பது என்னுடைய மனசை அறுக்கிறது. நீர் நன்றாகப் படித்தவர் சிறந்த விவேகி உமக்குத் தெரியாதவை நான் அதிகமாகச் சொல்ல ஒன்றுமில்லை. நீர் முதலில் கொஞ்சம் ஆகாரம் பார்த்துக் கொள்ளும், நீர் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதும், எனக்குச் சந்தேகமறத் தெரிவதால், உமக்கு எங்களால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அதையெல்லாம் நாங்கள் செய்யத் தடையில்லை. நாங்கள் உமக்கு எள்ளளவும் தீங்கு செய்வோம் என்று நீர் எண்ண வேண்டாம்' என்று நிரம்பவும் உருக்கமாகவும், பரிவாகவும் அந்தரங்கமான அன்போடும் கூறினார்.

அவரது வார்த்தைகள், நடுக்கடலில் கிடந்து திசையறியாமல் தடுமாறும் கப்பலுக்கு தீபஸ்தம்பமும், கடற்கரையும் முற்படுவது போல, அளவற்ற சந்தோஷத்தையும், இன்பத்தையும் உண் டாக்கின. அந்த இன்ஸ்பெக்டர் காலையில் பங்களாவில் நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, அவர் ஈவிரக்கமற்ற மகா கொடிய துஷ்டன் என்று கண்ணபிரான் அதுவரையில் எண்ணியிருந்த தற்கு முற்றிலும் மாறாக, அவர் இரக்கமும், இளக்கமும், ஜீவ காருண்யமும் நிறைந்த நடுநிலை தவறாத நற்குண புருஷர் என்ட்து தெரியவே, அது கண்ணபிரானது புண்பட்ட மனதில் ஜீவாமிர்தம் சொரியப்படுவது போல, மிக மிக இன்பமாக இருந்தது. போலீசார் தம்மை அடித்து வருத்தி அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் என்றும், தனது மனிதர்கள் வந்து தன்னிடத்தில் பேச விட மாட்டார்கள் என்றும் அவன் நினைத்ததற்கு மாறாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னி டத்தில் நிரம்பவும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து, தனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்து கொடுப் பதாக வாக்களித்தது தான் சிறிதும் எதிர்பார்க்காத அதிர்ஷ்ட மாகத் தோன்றியது. அந்த இன்ஸ்பெக்டர் தன்னிடத்தில், ஒரு வேளை கபடமாக அப்படி நடக்கிறாரோ என்று நினைப்பதற்கு எவ்விதக் குறிப்பும் காணப்படாது இருந்தமையால், அவர் செ.கோ.i-16 - - -