பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 7

இடத்தில் பட்டுவாடா செய்து பழகிய வேறொரு தபாற்காரனி டத்தில், அந்த ஜாப்தாவைக் கொடுத்து அவன் எந்த வரிசையாகப் பட்டுவாடா செய்து கொண்டுபோவானோ, அந்த வரிசையா கவே தங்களை அழைத்துக் கொண்டு போகும்படி சொல்ல, அவன் அந்த ஜாப்தாவில் குறிக்கப்பட்ட மணியார்டர் முதலிய வைகளை வரிசையாக எப்படி கொடுத்துக்கொண்டு போவானோ அப்படியே அவர்களை அழைத்துக்கொண்டு போனான். அப்படியே அவர்கள் நாலைந்து வீடுகளுக்குப் போய், அன்றைய தினம் வந்திருந்த உருப்படியை அந்தந்த விலாசதார் வாங்கிக் கொண்டாரா என்பதை விசாரித்துக்கொண்டே போனார்கள். ஐந்தாவது விலாசதாரின் வீடுவரையில் யாவரும் தத்தம் உருப்படிகளை வாங்கிக் கொண்டதாக ஒப்புக் கொண்டனர். போலீசாரும் மற்றவரும் இன்னமும் அப்பால் நடந்து ஆறாவது விலாசதாருடைய வீட்டுக்குப் போனார்கள். அந்த வீடு விசாலமான இரண்டு கட்டுகளுள்ள பெருத்த மெத்தை வீடு. அதன் வாசற்கதவு மூடி வெளியில் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் கதவில் 1525 என்ற இலக்கம் காணப்பட்டது. அந்த விலாசதாருக்கு அன்றைய தினம் 10 ரூபாய்க்கு மணியார்டர் வந்திருந்தது. அந்த விலாசதாருடைய பெயர் கந்தசாமி முதலியார் என்று அவர்களுடைய ஜாப்தாவில் இருந்தது. ஆகவே, அந்த வீட்டிலிருந்த கந்தசாமி முதலியார் அந்த வீட்டின் கதவை மூடிப் பூட்டிக் கொண்டு எப்போது வெளியிலே போனா ரென்பதையும், எப்போது திரும்பி வருவார் என்பதையும் அறிந்துகொள்ளும்பொருட்டு, போலீசார் அண்டை வீட்டுக்காரர் களை அழைத்து, கந்தசாமி முதலியாரைப் பற்றிய விவரங்களைக் கேட்க, அவர்கள் தமக்கொன்றும் தெரியாது என்று சொன்ன தோடு அந்த வீடு காலியாகி ஒரு மாச காலமாகப் பூட்டப்பட் டிருந்ததாகவும், நேற்றைய தினம் யாரோ ஒருவர் அதைத் தாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்து கொஞ்சநேரம் உள்ளே இருந்துவிட்டுப் போனதாகவும், மறுபடி இன்றைய தினம் காலையில் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பிறகு கதவை எப்போது, யார் பூட்டினார்கள் என்பது தங்களுக்குத் தெரியா தென்றும், தபாற்காரன் அந்த வீட்டில் மணியார்டர் பட்டுவாடா