பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 233

உமக்கும் அவளுக்கும் சந்திப்பாவது சம்பாஷணையாவது நடந்ததுண்டா? அதனால் அவளுடைய பிரியம் உறுதிப்பட்டி ருக்குமா? அல்லது அது இதனால் மாறிப்போகக்கூடியதா? இதையெல்லாம் நான் உம்முடைய நன்மையைக் கருதியே கேட்கிறேன். ஏதடா இந்த இன்ஸ்பெக்டர் தமக்குச் சம்பந்த மில்லா குடும்ப விஷயங்களை எல்லாம் கேட்கிறாரே என்று நீர் ஆயாசப்படக்கூடாது. இந்த ஆபத்துச் சமயத்தில் உம்முடைய உண்மையான நிலைமை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி உமக்கு எதாவது உபயோகமான யோசனை சொல்லவேண்டும் என்பதே என்னுடைய கருத்து; உமக்குப் பிரியமானால் இந்தக் கேள்விக்கு நீர் பதில் சொல்லலாம். இல்லா விட்டால், கட்டாயம் இல்லை' என்று நயமாகவும், தமக்கு அந்த விஷயத்தில் பரோபகாரச் சிந்தையைத் தவிர சுயநலமான கருத்து எதுவும் இல்லை என்பதை நன்றாகக் காட்டியும் பேசினார். -

அதைக்கேட்ட கண்ணபிரான் கோகிலாம்பாளுக்குப் பூஞ்சோலையில் நாகப்பாம்பினால் ஏற்பட்ட அபாயத்தையும், அதன் மூலமாக அவளுக்கும் தனக்கும் நேரிட்ட சந்திப்பையும் சம்பாஷணையையும் தெரிவிக்கலாமோ கூடாதோ என்ற ஐயத்தினால் இரண்டொரு நிமிஷ நேரம் தயங்கி ஒருவாறு கிலேசம் அடைந்தவனாய் அவரை நோக்கி, "என் விஷயத்தில் இவ்வளவு அபிமானம் வைத்துத் தாங்கள் கேட்கும்போது நான் தங்களிடத்தில் எதையும் மறைப்பது ஒழுங்கல்ல. அந்தப் பங்க ளாவில் எங்களுக்கு விருந்து நடந்த தினம் முதல் கலியாணம் வரையில் நாங்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆகையால் அதுமுதல் நாங்கள் அவ்விடத்திலேயே இருந்து வந்தோம். நேற்றைய தினம் சாயுங்காலத்தில், நான் பங்களாவின் தோட்டத்துக்குள் போய் வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தேன். செடி கொடி களுக்கு நடுவில் இருந்த ஒர் ஊஞ்சற் பலகையின்மேல் மூத்த பெண் உட்கார்ந்து எதைப்பற்றியோ சிந்தனை செய்தவளாய் மெய்ம்மறந்திருந்தாள். நான் அவளுடைய பின்பக்கமாக வந்தேன் ஆகையால் நான் வந்ததை அவள் உணரவில்லை. அந்தச் சமயத்தில் அவளுக்குத் தெரியாமல் அவளுடைய காலுக்குக்கீழே