பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

செளந்தர கோகிலம்



அதைக்கேட்ட கண்ணபிரான் அந்த இன்ஸ்பெக்டர் ஒரு கால் மோசக் கருத்தாகத் தன்னிடத்தில் பேசுகிறானோ என்ப தையே நினையாதவனாய், எப்படியாகிலும் தான் விடுபட்டுப் போய்த் தனது தாயைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே கவலையும், ஆவலும் கொண்டவனாய், கோகிலாம்பாளுக்குக் கடிதம் எழுதி அனுப்பத் தீர்மானித்துக் கொண்டான். கோகிலாம் பாள் தன்னிடத்திற்கு வரும்போது, அந்தத் தபால் திருட்டு விஷயத்தில் தான் சிறிதும் குற்றமற்றவனென்பதை அவளது மனம் திருப்திகரமாக நம்பும்படி தான் எடுத்துச்சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கும் என்ற நினைவினாலும் கண்ணபிரான் அவளுக்குக் கடிதம் எழுதத் தீர்மானித்துக்கொண்டவனாய், இன்ஸ்பெக்டரை நோக்கி, ‘சரி; தாங்கள் எப்படி எழுதச் சொல்லுகிறீர்களோ அப்படியே எழுதுகிறேன். கடிதத்தை இப்போதே கொண்டு போய்க் கொடுக்கப்போகிறானா?” என்றான். お

இன்ஸ்பெக்டர் ஜெவானை நோக்கி, காகிதம், மை, இறகு முதலியவற்றை எடுத்து வரும்படி சொல்லி அவனை அனுப்பி விட்டுக் கண்ணபிரானைப் பார்த்து, “கடிதம் இப்போதே போய்ச்சேர்ந்துவிட்டால் பெண் விடியற்காலம் புறப்பட ஆயத்தமாக இருக்கும்” என்றார்.

கண்ணபிரான் அது சரியான யோசனை என்று ஒப்புக் கொண்டு அதை ஆமோதித்தவனாய், கடிதம் எழுத மிகுந்த ஆவல் கொண்டிருக்க, அடுத்த நிமிஷத்தில் காகிதமும் எழுது கருவிகளும் வந்து சேர்ந்தன. கண்ணபிரான் இருந்த அறையின் கதவும் திறந்துவிடப்பட்டது. அவன் எழுத ஆயத்தமாக உட்கார்ந்துகொண்டு இன்ஸ்பெக்டரது முகத்தைப்பார்க்க, அவர் "ஏன்? எழுதுமேன்? உம்முடைய சம்சாரத்துக்கு நீர் நிரம்பவும் வாத்சல்யமாக எழுதுவீர். கடிதம் இப்படித்தான் இருக்க வேண் டும் என்று சொல்ல நான் அருகமற்றவன். உங்கள் இருவருக்கும் உள்ள அன்னியோன்னியம் எவ்வளவு என்பது உமக்குத்தான் தெரியும்; ஆகையால் நீரே எழுதும். ஆனால் நான் சொன்ன இரண்டு விஷயங்களை மாத்திரம் கவனித்து, சுருக்கமாகவும் பிரியமாகவும் எழுதும்” என்றார். -