பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 241

உடனே கண்ணபிரான் அடியில் கண்டபடி கடிதம் எழுதலானான்.

செளபாக்யவதி கோகிலாம்பாள் அம்மாளுக்கு ஈசனருளால் சர்வாபீஷ்டமும் சர்வமங்களமும் உண்டாவதாக,

நாமிருவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்குப் பரிபக்குவமான காலம் இன்னமும் வரவில்லை என்பது இன்றையதினம் காலையில் ஏற்பட்ட புதிய இடையூறிலிருந்து நன்றாகத் தெரி கிறது. நேற்று சாயுங்காலம் நாம் இருவரும் பூஞ்சோலையில் தனி யாகச் சந்திக்க நேர்ந்தபோது திடீரென்று நேர்ந்த இடையூறுதான் நம்முடைய சுகவாழ்க்கைக்குக் கடைசியான இடையூறாக இருக் கும் என்று நான் நினைத்தேன். அதைக் காட்டிலும் பிரமாதமான பேரிடியாக இப்போது வந்து வாய்த்திருக்கிறது. பலாக்கனியின் வெளியில் கோடிக்கணக்கில் முள்களை நிறுத்தி, உட்புறத்தில் மாதுரியமான சுளைகளை வைத்துப் பத்திரப்படுத்தியிருப்பது போல, மனிதருக்காகக் கடவுள் படைத்திருக்கும் ஒவ்வோர் இன்பத்தையும் பற்பல இடைஞ்சல்கள் சூழ்ந்து பாதுகாத்திருக்கச் செய்திருக்கிறார்.

அன்றைய தினம் நீயும், உன் தங்கையும் கடற்கரைக்குப் போக ஆசைப்பட்டு, ஸாரட்டில் ஏறிக்கொண்டு போன காலத்தில் மோட்டார் வண்டியினால் உங்களுக்குப் பிரான அபாயமான விடத்து நேரப்போகிறது என்பதை நீங்கள் கன விலும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். அதுபோல, நேற்றைய தினம் சாயுங்காலம், நீ பூஞ்சோலைக்குப் போகுமுன், ஊஞ்சற் பலகையின் அடியில் நாகப்பாம்பு வரும் என்பதை நீ எதிர் பார்த்தே இருக்கமாட்டாய், மனிதருடைய உயிரும் உடலும் எங்கெங்கே போகின்றனவோ, அங்கங்கே அவைகளின் நிழல் போல அபாயமும் கூடவே இருந்து வருகிறது என்று அன்றைய தினம் நீயே சொல்லியிருக்கிறாய். ஆகையால் இன்றையதினம் எனக்கு அபாயம் நேர்ந்ததைப்பற்றி நான் உனக்கு அதிகமாகச் சமாதானம் சொல்லவேண்டுமென நினைக்கவில்லை. என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் மகா இழிவான இந்தத் திருட்டை நான் செய்யக் கூடியவனல்ல என்பது உன் மனசுக்கே நிச்சயமாகத் தெரிந்த விஷயம். ஆனாலும் இதனால் உனக்கு அபாரமான செ.கோ.i-17