பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

செளந்தர கோகிலம்



போதும், நாம் அவர்களைக் கைவிட நியாயம் இல்லை. கச்சேரி யில் அக்கிரமம் நடந்துவிட்டது என்று நாமும் அக்கிரமம் செய்து விடலாமா? ஒரு நாளும் செய்யக்கூடாது. ஊரில் இருக்கும் ஜனங்களுக்கு உள் விஷயம் எல்லாம் என்ன தெரியப்போகிறது? உலகம் பலவிதம். ஊரில் உள்ளவர்கள் அவரவர்களுக்குத் தோன்றியபடி பேசுவார்கள். எல்லோரையும் திருப்தி செய்ய நம்மால் ஆகுமா? ஒரு கிழவனும் அவனுடைய பேரனும் கழுதையைக் கட்டித் தூக்கிய கதைபோல நம்முடைய காரியம் முடியும். யார் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று நமக்கு எது நியாயமாகத் தோன்றுகிறதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்,” என்றாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதி கோகிலாம்பாளை அன்பாக நோக்கிப் புன்னகை செய்து, "நீ சொல்வது நிரம்பவும் சரியான நியாயம், அதைப்பற்றி சந்தேகமில்லை. ஜனங்கள் சொல்வது சில சமயங்களில் தவறாக இருந்தாலும், வெகுஜனவாக்கை நாம் முற்றிலும் உல்லங்கனம் செய்வது உசிதமாகாது. அது போனாலும் போகட்டும் என்றால், உனக்கு ஒரு தங்கை இருக் கிறாள். அவளுக்கும் கலியாணம் ஆகவேண்டும். நீ சொல்லும் நியாயத்தைக் கேட்டுத் திருப்தியடைந்து, நாங்கள் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறதாக வைத்துக்கொண்டாலும், எங்களைச் சேர்ந்த மற்ற பந்து ஜனங்கள் எல்லோரும் எங்களைத் துரஷித்து ஏளனம் செய்து விலக்கிவிடுவார்கள் அல்லவா? மூத்த பெண் தண்டனை அடைந்த மனிதரைக் கட்டிக் கொண்டிருக் கிறாள். அந்த இடத்தில் நீங்கள் எப்படிப் பெண் கொண்டீர்கள் என்று அவர்கள் எங்களைக் கேட்டால், நாங்கள் மறுமொழி சொல்வது என்ன இருக்கிறது? நாங்கள் மாத்திரம் இப்படிச் சொல்வோம் என்று நினைக்காதே. செளந்தரவல்லியை நீங்கள் எங்களுக்குக் கொடுக்காமல், வேறே இடத்தில் கொடுப்பதாகவே வைத்துக் கொண்டு பேசுவோம்; அவர்களும் இப்படித்தான் நினைத்துப் பயப்படுவார்கள். ஆகையால், அந்த விஷயத்தை நீ அவசியம் கவனிக்கவேண்டும். ஏதடா இவர்கள் இப்படிச் சொல்லுகிறார்களே, இவர்கள் இல்லாவிட்டால், செளந்தர வல்லிக்கு வேறே இடம் அகப்படாதா என்று நீ நினைக்கக் கூடாது” என்று நிதானமாகவும், தங்களைப் பற்றிப் பேசாமல்