பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி - 263

சரி அல்லது தண்டனை அடைந்தாலும் சரி, அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்று நீ கற்பகவல்லியம்மாளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் சொல்லும்படி அம்மாளிடத்தில் சொன்னதுதான் என் மனசுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. அவர் யாதொரு குற்றமும் செய்யாதவர் என்று கச்சேரியில் மெய்ப்பிக்கப் பட்டதன் மேல், அவர் விடுதலையடைந்தால்கூட அவருக்கு ஒரு களங்கம் ஏற்பட்டுப்போகும். அவரைக் கலியாணம் செய்து கொண்டால் ஜனங்கள் இளக்காரமாகப் பேசி ஏளனம் செய் வார்கள். அதுவாகிலும் பரவாயில்லை என்று வைத்துக் கொள்ள லாம். ஏனென்றால், யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். அதுபோல எப்படிப்பட்டவருக்கும் எதிர்பாராத அபாயம் சம்பவிப்பது உண்டு. அதனால் அவர்களைத் தள்ளிவிடுவது தருமம் ஆகாது. அப்படி அவர் விடுதலையடைந்தால், அவரை நீ கலியாணம் செய்து கொள்வது இரண்டாவது பட்சமாக இருந்தாலும் அதைப்பற்றி யாரும் நேரில் வந்து ஆட்சேபிக்க முடியாது. ஆனால், அவர் குற்றவாளிதான் என்று கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டதன்மேல் தண்டனை அடைந்து, தண்டனை காலத்துக்குப் பிறகு, அவர் வரும்போது அவரை நீ கட்டிக் கொள்வது ஜனசம்மதமான காரியமும் அல்ல; நியாயமும் ஆகாது. இந்தச் சங்கதியைக் கேட்டு கற்பகவல்லியம்மாள் கரை கடந்த சந்தோஷமடைய ஏதுவுண்டு; ஆனால், மற்ற ஜனங்கள் இதைக் கேட்டால் அதிருப்தியடைந்து நிரம்பவும் கேவலமான அபிப்பிராயத்தோடு புறப்பட்டுப் போவார்கள். அவர்கள் தங்களுடைய மனசில் உள்ளதை இங்கே வெளியிடப் போகிற தில்லை. ஆனாலும், வெளியில் போய் ஏளனமாகப் பேசுவார்கள் என்பது நிச்சயம்,” என்று மிகமிக விநயமாகக் கூறினாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள், 'நீங்கள் சொல்வ்து நியாயமான விஷயந்தான். இருந்தாலும், அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்றி நாங்கள் நிரம்பக் காலமாகக் கேள்வியுற்று நன்றாகத் திருப்தி செய்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பது சத்திய மான விஷயம். ஆகையால், அவர்கள் விடுதலையடைவது நிச்சயம். ஒருவேளை பொய்ச்சாட்சியின் உதவியால் தண்டனை ஏற் பட்டால், அது அநியாயமான தண்டனை. ஆகையால், அப்