பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

செளந்தர கோகிலம்



ஆக 2000-ரூபாய் இப்போதே கொடுத்துவிடுகிறேன். என்மேல் கொஞ்சம் ஆயாசப்பட வேண்டாமென்றும், என்னால் ஏற்பட்ட தேகத் துன்பத்திற்கு என்னை மன்னித்துக்கொள்ளும்படியும் அம்மாமார்களிடத்தில் சொல்” என்று உருக்கமாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஜனங்களுள் சிலர் திருப்தியடைந்தனர். சிலர் தங்களது கோபம் தணியாதவராகவே இருந்தனர். வண்டிக்கார மினியனோ அப்போதும் தனது ஆத்திரத்தை அடக்கமாட்டாதவனாய்த் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தான். அந்த தனவந்தர் மரியாதையாகவும் பணிவாகவும் நியாயமாகவும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மடந்தையர் இருவரும் பெரிதும் திருப்தியடைந்தனர். செளந்தரவல்லியோ தனது கடைக்கண்ணால் கபடமாக அந்த மனிதரை நோக்கி, அவரது யெளவனத்தையும், அலங்காரச் சிறப்பையும், பிரபுத் துவத்தையும் கண்டு ஒருவிதமான மனநெகிழ்வையும் பிரியத் தையும் அடைந்தவளாய்த் தனது பக்கத்திலிருந்த கோகிலாம் பாளை விரலால் தட்டித் தணிவான குரலில், 'கோகிலா! இவருடைய மேன்மைக் குணத்தைப் பார்த்தாயா! இவர் தக்க பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை என்பதற்குச் சந்தேகம் இல்லை! இவர் சொல்லுகிறபடி நாம் இந்த மோட்டார் வண்டியிலேயே வீட்டுக்குப்போய் விடுவோமே. வண்டியையும் குதிரையையும் இவரே எடுத்துக்கொண்டு பணம் கொடுத்து விடட்டுமே; நாம் புதிய வண்டி குதிரைகளை வாங்கிக் கொள்வோமே" என்று காதோடு ரகசியமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட கோகிலாம்பாள், "நீ பேசாமலிரு நான் இவருக்குப் பதில் சொல்லுகிறேன்” என்று செளந்தரவல்லிக்கு ரகசியமாக மறுமொழி கூறிய பிறகு, வண்டிக்காரனைப் பார்த்து மெதுவான குரலாகப் பேசத் தொடங்கி, "அடேய் மினியா இந்த அபாயம் ஏதோ தற்செயலாக நேர்ந்துவிட்டது! வேண்டு மென்று இந்தக் காரியத்தை யாரும் செய்ய மாட்டார்கள். இந்த விஷயத்தில் இந்த ஐயாவின் மேல் எவ்விதமான குற்றமும் இல்லை. நாமெல்லோருக்கும் ஏற்பட இருந்த பெருத்த உயிர்ச் சேதத்தை ஈசுவரன்தான் தடுத்து நம்மையெல்லாம் காப்பாற் றினார். இந்த விஷயத்தில் எங்களுக்குக் கொஞ்சமும் வருத்த மில்லை. எங்களுக்கு அறிமுகமான ஒருவர் வண்டி கொண்டு