பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 27

நூறு ரூபா வண்டியெயும் ஆயிர ரூபாக் குதிரையையும் அநியாயமா வாயிலே போட்டுக்கினான் பாவிப்பய!” என்று மிகுந்த ஆத்திரத்தோடும் வயிறெரிந்தும் பேசவே, அதைக்கேட்ட அந்தப் பெரிய மனிதருக்கு ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. ஆனால், அங்கே கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கோபமாகவும் அதிருப்தியாகவும் தம்மைப் பார்ப்பதைக் கருதியும், நாணிக்கோணிப் பஞ்சவருணக் கிளிகள் போல ஜதையாக அங்கே நின்ற இரண்டு மடமயிலாரின் அழகைக் கண்டும் அவர் நிரம்பவும் சாந்தமாகவும், நிதானமா கவும் சிநேக பாவமாகவும் பேசத் தொடங்கி, "அடேய்! வண்டிக் காரா! கோபித்துக்கொள்ளாதே! இந்தப் பிசகை நான் வேண்டு மென்று செய்யவில்லை. இந்த மோட்டார் வண்டியில் ஒரு யந்திரம் கெட்டுப் போய்விட்டது, அதனால், நான் எவ்வளவோ பிரயாசைப்பட்டும், இதன் வேகத்தைக் குறைக்கவும், நிறுத்தவும் கூடாமல் போய்விட்டது. நீ வண்டியைக் கொஞ்சம் அப்பால் கொண்டு போகாதிருந்தால், நாமெல்லோரும் இந்நேரம் இறந்து போயிருப்போமென்பது நிச்சயமான சங்கதிதான். கொஞ்ச நேரத்துக்கு முன் இந்த ஸாரட்டு கவிழ்ந்ததையும் குதிரை இடக்குப் பண்ணி இழுத்துக் கொண்டு போனதையும் நான் பார்த்தேன். உடனே மோட்டார் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து, குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டுமென்று நினைத்து என்னாலான வரையில் விசையை அழுத்திப் பார்த்தேன். ஒன்றும் சாத்தியப்படவில்லை. அதற்குள் மோட்டார் வண்டி அரைமயில் தூரம் போய்விட்டது. அதன் பிறகு என்னவோ தற்செயலாக இந்த விசை என்னுடைய வசத்துக்கு வந்தது. நான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று உடனே வண்டியைத் திருப்பிக்கொண்டு ஓடிவந்தேன். என்மேல் வருத்தம் வைக்க வேண்டாமென்று அம்மாமார்கள் இடத்தில் சொல். உங்களு டைய ஜாகை எங்கே இருக்கிறதென்பதைச் சொன்னால், நான் உங்களையெல்லாம் இந்த மோட்டாரில் வைத்துக்கொண்டு போய் ஜாக்கிரதையாக வீட்டில் சேர்க்கிறேன். உங்களுக்கு அடி, காயம் முதலியவைகள் பட்டிருக்கலாம். அதற்காக உடனே ஒரு டாக்டரையும் வரவழைக்கிறேன். இந்தக் குதிரையும், வண்டியும் இங்கேயே இருக்கட்டும். இவைகளை நானே எடுத்துக்கொண்டு இவைகளுக்காக 1700-ரூபாயும், டாக்டருக்காக 300-ரூபாயும்