பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

செளந்தர கோகிலம்



இந்த மோட்டார் வண்டியையும் இல்லாத பொல்லாத சாமான்களையும் கொண்டு வந்து மனிதர் பாதையோடு நடந்து போவதற்குக்கூட முடியாமல் செய்துவிட்டார்களே மனிதர் களுடைய உயிரைக் கோழி கொக்குகளுடைய உயிர் போலல் லவா திரணமாக மதித்து இந்த மோட்டார் வண்டியை விட்டுக் கொண்டு போகிறார்கள். ஊரில் கேள்விமுறை இல்லாமல் போய் விட்டதே' என்று கூறித் தங்களது கோபத்தையும், அநுதாபத் தையும், விசனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த தருணத்தில், தெற்குப் பக்கத்திலிருந்து வந்த மோட்டார் வண்டியொன்று, அவர்களிருந்த இடத்தில் வந்து நின்றது. அதைக் கண்ட ஜனங்கள் எல்லோரும் ஒருபக்கமாக விலகினார்கள். அந்த மோட்டார் வண்டியில் சுமார் 25-வயதுள்ள ஒரு யெளவனப் புருஷர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர், ஜரிகைகள் நிறைந்த குல்லா முதலிய ஆடம்பரமான உடைகளையும், வைரக் கடுக்கன், தங்கக் காப்பு, கொலுசு சங்கிலிகள், தங்க மூக்குக் கண்ணாடி முதலிய ஆபரணங்களையும் அணிந்து, ஒரு பெருத்த சமஸ்தானத்தின் மகாராஜன்போலக் காணப்பட்டார். அவரது தோற்றம் நிரம்பவும் கம்பீரமாகவும் அமர்த்தலாகவும் இருந்தது. அவர் படாடோபத்திலும், சிற்றின்பத்திலும், வீண் பெருமை யிலும் தமது புத்தியை அதிகமாகச் செலுத்துபவர் என்பதை அவரது முகத் தோற்றமே எளிதில் காட்டியது. அவர் யாரோ பெருத்த தனவந்தரது புத்திரரென்று யூகித்துக் கொண்ட ஜனங்கள் அவர் என்ன செய்யப் போகிறாரென்பதை ஆவலோடு கவனித்தவண்ணம் மெளனமாக விலகி நின்றனர். அதற்குள் குதிரையின் காயத்தைக் கட்டிவிட்டு வந்த வண்டிக்கார மினியன் அங்கே வந்து நின்ற மோட்டாரிலிருந்த மனிதரைப் பார்த்து மிகுந்த கோபமடைந்து, 'ஆரையா நீ? இப்படித்தானா வண்டியை ஒட்டறது? ஒனக்குக் கண்ணுகிண்ணு இருக்குதா இல்லியா? நானு என்னோட வண்டியை sசணநேரம் அந்நாண்டே கொண்டு போவாமே இருந்தா இந்நேரம் எல்லாம் அடியோட தொலஞ்சுபோயிருக்கும், நீயும் இந்நேரம் மாண்டு போயிருப்பியே! இப்படித்தானாய்யா செய்யறது? மின்னெப் பின்னே மோட்டாரு ஒட்டிப் பளகியிருந்தா ஒட்டனும்: இல்லாமெப் போனாச் சொம்மா உளுந்து கெடக்கணும். பைத்தியக்கார மனிசன் நல்ல வண்டி ஒட்டினான் ஐயா! எளு