பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

செளந்தர கோகிலம்



றவன். தஞ்சை ஜில்லாவிலுள்ள கோவிந்தபுரம் ஜெமீந்தார் என்னுடைய தகப்பனார்" என்றார்.

அவ்வாறு செளந்தரவல்லி கேள்வி கேட்டதும், ஜெமீந் தாரின் குமாரர் மறுமொழி கூறியதும், கோகிலாம்பாளுக்கு நிரம்பவும் அருவருப்பாக இருந்தமையால், அவள் கிலேச மடைந்து தனது வதனத்தை அப்புறம் திருப்பிக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் ஜல் ஜல் ஜல் என்று சதங்கைகள் ஒலிக்க ஒரு குதிரை வண்டி விரைவாக வந்து அவ்விடத்தில் நின்றது. வண்டிக்காகப் போயிருந்த யெளவன குமாஸ்தா அதற்குள்ளி ருந்து கீழே குதித்து, "வண்டி வந்துவிட்டது. ஏறிக்கொள்ளலாம்" என்று மினியனைப் பார்த்துக் கூறினான். அதைக் கேட்ட கோகிலாம்பாள், "சரி, அடேய் மினியா! நீ இவ்விடத்திலேயே வண்டியையும் குதிரையையும் பார்த்துக் கொண்டிரு, நாங்கள் வீட்டுக்குப் போய் இன்னொரு குதிரையையும் புதிய சக்கரங் களையும் ஆள்கள் மூலமாக அனுப்புகிறோம்' என்று மிருதுவான இனிய குரலில் கூறிவிட்டுப் பின்புறம் திரும்பித் தனது முதுகுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த செளந்தர வல்லியை நோக்கி, 'போகலாம் வா’ என்று கூறி அழைத்துக் கொண்டு குதிரை வண்டியண்டை சென்றாள்; அங்கே கூடி இருந்த சகலமான ஜனங்களது விழிகளும் தங்கள்மீது வீழ்ந்திருக் கின்றன என்பதை அந்த மடந்தையர் இருவரும் உணர்ந்தார்கள் ஆதலால் அவர்கள் மிகுந்த நாணமும் கிலேசமும் அடைந்து தலைகுனிந்து மடவன்னம் எனத் தளர்நடை நடந்து குதிரை வண்டியை அணுகி ஏறி அதற்குள் உட்கார்ந்து கொண்டனர். அதற்குள் செளந்தரவல்லியின் கடைக்கண் பார்வை நாற்புறங் களிலும் வட்டமிட்டு, ஜனங்களையும், மோட்டார் வண்டியி லிருந்த ஜெமீந்தாரது புத்திரரையும், நமது யெளவன குமாஸ் தாவையும் பார்த்துத் திரும்பி வந்தது. ஆனால் கோகிலாம்பாள் அவ்வாறு எவரையும் பாராமல் தனது பார்வையைத் தரைப் பக்கம் திருப்பியவண்ணமே வண்டியில் உட்கார்ந்தாள்.

அப்போது அந்த யெளவன குமாஸ்த்ா மினியனை நோக்கி, 'அடே மினியா! அம்மாமார்களை வண்டியில் தனியாக அனுப்பு வது சரியல்ல. நீயும் இந்தக் குதிரை வண்டியில் போய்விட்டுவா நீ வருகிறவரையில் நான் இங்கே இருந்து ஸாரட்டையும்