பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

செளந்தர கோகிலம்



தோடு புன்னகை செய்து, 'இதெல்லாம் uT೮ಅ? எனக்கா? இந்தத் தட்டுகளில் இருக்கும் பொருள் சுமார் பதினாயிரம் ரூபாய் தாளும் போலிருக்கிறதே! இவ்வளவு பெருத்த செல்வத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகி றோம்? இவ்வளவு உயர்வான சாமான்களை வைக்கத் தகுந்த பெட்டி பேழைகள்கூட எங்களிடத்தில் இல்லையே! இவைகளை வைத்து ஒர் இரவு காப்பாற்ற எங்களால் ஆகுமா! இவைகளெல் லாம் எங்களுக்கு வேண்டாமம்மா! தங்களுடைய அன்பும் பட்சமும் என்றைக்கும் மாறாமல் இந்த ஏழைகளின்மேல் இருக்குமானால் அதுவே ஒரு கோடி பெறும்" என்று விநயமாக மொழிந்தாள்.

பூஞ்சோலையம்மாள் : (நயமாக வற்புறுத்தியும் பணி வாகவும் பேசத் தொடங்கி) தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. நாங்கள் செய்யும் மரியாதையைத் தாங்கள் வேறே வித்தியா சமாக நினைத்துக்கொள்ளக் கூடாது. தங்களுடைய புத்திரர் நேற்றைய தினம் செய்த உதவி சாதாரணமானதல்ல. எங்களு டைய உயிரையெல்லாம் அவர் காப்பாற்றியிருக்கிறார். அவ ருக்கு நாங்கள் எங்களுடைய ஆஸ்தி முழுவதையும் கொடுத் தால்கூட, அது சமமான கைம்மாறாகாது; அதுவும் தவிர, நேற் றையதினம் குதிரைவண்டியில் வந்த தங்களுடைய குமாரர் பங்களாவின் வாசலில் இறங்கினாராம். இறங்கினவர் உள்ளே வருவாரென்று நினைத்து வண்டிக்காரன் வண்டியை உள்ளே ஒட்டிக்கொண்டு வந்தானாம். என்னுடைய குழந்தைகள் அறியாத சின்ன பெண்கள். ஆகையால் அவரோடு பேச வெட் கப்பட்டு அவருக்கு ஒர் உபசார வார்த்தைக்கூடச் சொல்லாமல் வந்துவிட்டார்களாம். அந்த விவரத்தைக் கேட்டவுடனே என் மனம் பட்டபாடு இவ்வளவு அவ்வளவல்ல. இரவெல்லாம் அந்த நினைவே என் மனசில் உறுத்திக் கொண்டிருந்தது. அதற்காகவே, நான் பொழுது விடிந்தவுடனே புறப்பட்டு ஓடிவந்தேன். எங்க ளுக்கு ஈசுவரன் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். தங்களுடைய கிருபையால் எங்களுக்கு ஒரு குறைவும் கிடையாது. நாங்கள் யாரையாவது பார்க்கப் போனால், வெறுங்கையோடு போகிறதே இல்லை. இப்படித்தான் எதையாகிலும் கொண்டுபோய்க் கொடுத்து எங்களுடைய