பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 67

மரியாதையைத் தெரிவித்துக் கொள்ளுவது வழக்கம். தங்களுடைய புத்திரர் எங்களுக்குச் செய்த உதவி எவ்வளவு பெரியது என்பதையும், அதை நாங்கள் எவ்வளவு அதிகமாக உணருகிறோம் என்பதையும் சொற்பமாவது செய்கையால் காட்ட வேண்டும் என்றே நான் இந்தத் தாம்பூலத்தைக் கொடுக் கிறேன். தாங்கள் மறுக்காமல் இதை ஏற்றுக்கொண்டால், நேற்று தினம் தங்களுடைய குமாரர் எங்களுடைய வயிறுகளில் பால் வார்த்ததைவிட நூறு மடங்கு அதிகமாக எங்களுடைய மனசு இப்போது குளிரும் - என்று நிரம்பவும் பணிவாகவும் மிக மிக உருக்கமாகவும் நயந்து வேண்டிக் கூறினாள்.

கற்பகவல்லியம்மாள் ஏழ்மை நிலைமையில் இருப்பவள் ஆனாலும், பிறரது பொருளை விஷமாக மதித்து விலக்கக்கூடிய உத்தம குணம் உடையவளாய், அதுவரையில் அயலாரிடத்தில் ஒரு துரும்பைக்கூடப் பெற்று வராமலிருந்தாள். அப்படி இருந்தும், ஒரு மகாராஜாவின் பட்டமகிஷிக்கு ஒப்பிடத்தக்க மேம்பாடும், செல்வமும், செல்வாக்கும் உடைய அந்தப் பூஞ் சோலையம்மாள் தங்களை அவ்வளவு தூரம் மதித்து வந்து அன்பையும் மரியாதையையும் சொரிந்து நிரம்பவும் நயந்து வேண்டும்போது அவர்களது வேண்டுகோளைப் பிடிவாதமாக மறுப்பது கண்ணியமானது அல்ல என்று நினைத்த கற்பகவல்லி யம்மாள், 'என்னுடைய மகன் ஏதோ ஒர் அற்ப உதவி செய்வதைக் கருதி தாங்கள் எங்களை இவ்வளவு அபாரமாகப் பெருமைப்படுத்துவதைக் காண்பது எனக்கு நிரம்பவும் லஜ்ஜையாக இருக்கிறது. ஒருவருக்கு ஒர் அபாயம் நேரிட்டால், அதை மற்றவர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? எப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற பாவியாக இருந்தால்கூட, அவன் அந்த ஆபத்தில் உதவி செய்துதான் இருப்பான். அப்படிச் செய்யா விட்டால், அவனை மனிதன் என்று சொல்லலாமா? கேவலம் மிருகம் என்றல்லவா மதிக்க வேண்டும். இந்த விஷயத் தில் என்னுடைய பையன் மனிதருக்கு மனிதர் செய்யவேண்டிய கடமையைத்தானே நிறைவேற்றினான். அதற்கு இவ்வளவு பெருமைப்பாடு நடத்தவேண்டுமா?’ என்றாள்.

பூஞ்சோலையம்மாள், தாங்கள் சொல்வது நியாயமான சங்கதிதான். அவர் எப்படித் தம்முடைய கடமையைச் செய்