பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

செளந்தர கோகிலம்



தேக அசெளக்கியத்தோடிருப்பவர்கள் அதை லட்சியம் பண்ணா மல் எவ்வளவு பாடுபட்டு விருந்து தயாரித்திருக்கிறார்கள். அதைச் சாப்பிடுவதற்கு உடம்பு சரிப்படவில்லையென்று நாம் சொல்வது அழகாயிருக்காதென்று நினைக்கிறேன். எனக்கு உடம்பிலே இப்போது ஒரு கோளாறுமில்லை. மெல்ல மெல்ல நாம் அங்கே போய் விடலாம். ஆனால் ஆபீசுக்கு ரஜாக் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். அதை யார் கொண்டுபோய் கொடுக் கிறது!" என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோலத் தன் விருப்பத்தை நயமாய் வெளியிட்டான்."

கற்பகவல்லியம்மாள், "அதையும் இவர்களே சொல்லி விட் டார்கள் - இவர்களுடைய வீட்டில் எத்தனையோ குமாஸ் தாக்களும் ஆள்களும் இருக்கிறார்கள் யாராவது ஒருவனிடத்தில் கடிதத்தைக் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்' என்றாள்.

கண்ணபிரான், “அந்த அற்பக் காரியத்துக்கெல்லாம் நாம் இவர்களுடைய தயவை எதிர்பார்த்தால் நம்முடைய கண்ணியம் குறைந்து போகும். நாமே யாராவது ஒரு கூலியாளைப் பிடித்து, அவனிடத்தில் கடிதத்தைக் கொடுத்தனுப்பிவிட்டு, ஸ்நானம் முதலியவைகளை முடித்துக் கொண்டு சரியாகப் பத்து மணிக்கு அங்கே போவோம். இவர்கள் முன்னால் போகட்டும்" என்றான். அதைக்கேட்டுக் கொண்ட கற்பகவல்லியம்மாள் அவ் விடத்தை விட்டு, கூடத்திற்கு வந்து சேர்ந்து பூஞ்சோலையம் மாளை நோக்கிப் புன்னகை செய்து, 'நாங்கள் இன்றைக்கு அவசியம் வந்துதான் ஆக வேண்டுமோ? என்றாள்.

பூஞ்சோலையம்மாள் இனிமையான மலர்ந்த முகத்தி னளாய், 'ஆம் இந்த விருந்து இன்றையதினம் நிறைவேறா விட்டால், என்னுடைய மூத்த குழந்தையின் மனசு நிரம்பவும் கஷ்டப்பட்டுப் போய்விடும். எப்படியாவது இன்றைக்கு நீங்கள் வந்தால்தான் எங்களுக்கெல்லாம் பரம சந்தோஷமாக இருக்கும்” எனறாள.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள், "சரி, எங்களை இவ்வளவு தூரம் வற்புறுத்தி இவ்வளவு பிரியமாக யார் அழைக்கப் போகிறார்கள் அதிலும் தங்களைப் போன்ற பிரபுக்