பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 103 சகிக்கவில்லையே! ஆகா! கடவுளின் சோதனை இப்படியும் இருக்குமா என்று முற்றிலும் அங்கலாய்த்துக் கொண்டு அந்த மகா பரிதாபகரமான காட்சியைக் காண விரும்பாதவராய்த் தங்களது முகத்தை அப்புறம் திருப்பிக் கொள்வோரும், அந்த இடத்தையே விட்டு அப்பால் போவோரும், அவளிடம் நெருங்கி ஆறுதல் கூறுவோருமாய் இருந்தனர். அந்த விபரீதக் காட்சியைக் கண்டு கல்லும் கரைந்துருகும் என்றால், தயாள குணமும் எளிதில் இளகும் தன்மையும் வாய்ந்த நமது திவானும் அவரது மனையாட்டியும் அதைக்கண்டு எவ்வாறு தவித்திருப்பார்கள் என்பது கூறாமலே விளங்கும். அந்தப் பெண்ணின் கோரமான நிலைமையைக் கண்டவுடன் அவர்களது உயிர் உடலைவிட்டுப் போய்விட்டதென்றே சொல்லவேண்டும். அவர்களது தேகம் துடிதுடித்துக் கட்டிலடங்காமல் தவிக்கிறது; மனம் பதறுகிறது. அந்தப்பெண் பாசாங்கு செய்யவில்லையென்பதும் போலிஸ் ஜெவான்களால் அழைத்துச் செல்லப்பட்ட யெளவனப் புருஷன் அவளது கணவனென்பதும், அவர்களது விஷயத்தில் ஏதோ பெருத்த அக்கிரமம் நடந்துவிட்டதென்பதும் அவர்களது மனத்திற்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தமையால், அவர்களிருவரும் தம்மை மறந்து ஆவேசங்கொண்டவர்கள் போல மாறி, அந்த யெளவனப் பெண் சென்று கொண்டிருந்த இடத்தை நோக்கி விசையாக நடந்தனர். முன்னால் சென்று நெருங்கிய திவான் அங்கிருந்த மனிதர்களை நோக்கி, 'ஐயா ஏன் இந்தப் பெண் அழுகிறது? ஜெவான்கள் அந்த மனிதரை எதற்காகப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்?’ என்று நயமாகக் கேட்க, அங்கிருந்த மனிதர் எவரும் திவானை மதிக்கவும் இல்லை; மறுமொழி கூறவுமில்லை. அவர் ஒருவருக்குப்பின் மற்றொருவராய்ப் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டார். அங்கிருந்தோர் அளவற்ற விசனத்தில் ஆழ்ந்திருந்தமையால் அது சம்பந்தமான வரலாற்றை வாயில் வைத்துப்பேச அவர்கள் விரும்பாதவர்கள் போல அசட்டையாக இருந்துவிட்டனர். திவானை அவமானம் ஒரு புறத்தில் வதைக்கிறது; விஷயத்தை தெரிந்துகொள்ளலாம் என்றாலோ அவர்கள் சுமார் அரை பர்லாங்கு தூரத்திற்கு முன்னால் விசையாகப் போய்க் கொண்டிருந்தமையால், தாம் மோட்டார் வண்டியில் ஏறிச் சென்றாலன்றி சுலபத்தில்