பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iC4 செளந்தர கோகிலம் அவர்களிடம் போய்ச்சேர இயலாது என்பதை உணர்ந்த திவான் தாம் அதற்குமேல் என்ன செய்வது என்பதை அறியாதவராய்த் தவித்து நிற்க, அதை உணர்ந்த அவரது மனையாட்டி சரேலென்று மற்றப் பெண்பிள்ளைகளின் நடுவில் புகுந்து, அவ்விடத்தில் தலை மயிரை விரித்துவிட்ட வண்ணம் கண்ணிரை ஆறாய்ப் பெருக்கி மார்பில் ஓயாமல் அறைந்து புலம்பித் தவித்தவளாய்க் காணப்பட்ட அந்த யெளவன ஸ்திரியைப் பிடித்துக் கரை புரண்டெழுந்த வாஞ்சையோடு கட்டியணைத்துத் தூக்கி எடுத்து, இன்னொருத்தியை ஏவி அவளது தலைமயிரை ஒழுங்குப்படுத்தி முடிந்துவிடச் செய்து தனது முன்தானையால் அவளது கண்ணிரை ஒற்றி முகத்தைத் துடைத்துவிட்டு, பெற்ற தாய்போல, அன்பு ததும்பிய குரல்கொண்டு நிரம்பவும் மிருது வாகவும் ஹிதமாகவும் பேசத்தொடங்கி, 'அம்மா! அழாதே இத்தனை ஜனங்கள் உங்கள் விஷயத்தில் மனப்பூர்வமான இரக்கங் காண்பிப்பதிலிருந்து உங்கள் விஷயத்தில் ஏதோ அநியாயமான காரியம் நடந்திருக்கிறதாகத் தெரிகிறது. நாங்கள் திருவனந்தபுரத்தில் இருக்கிறவர்கள். அரண்மனையிலுள்ள பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் எங்களுக்கு இஷ்டமானவர்கள். உன்னுடைய விருத்தாந்தம் இன்னதென் பதை நீ சொல்வாயானால், எங்களால் கூடிய உதவியை உனக்குச் செய்கிறோம்” என்று தேன்மாரி பொழிவதுபோல முற்றிலும் இனிமையாகக் கூற, அதுகாறும், மற்ற ஜனங்கள் கூறிய ஆறுதல் மொழிகளையும் துக்க சமனத்தையும் பொருட்படுத்தா மல் போய்க் கொண்டவள் போலத்தன்னை மறந்து அழுது புலம்பி விழுந்தெழுந்து வந்துகொண்டிருந்த அந்த யெளவனப் பெண்ணிற்கு இந்த ஸ்திரீயின் சொற்கள் தேவாமிருத வருஷம்போல நிரம்பவும் ஹறிதமாகவும், ஆறுதலாகவும் படவே அவள் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த ஆவேசமும் துயரமும் தோற்றுவித்து, தி வானினது மனையாட்டியை இறுகக் கட்டியணைத்துக் கோவெனக் கதறி விம்மியழுது, "ஐயோ! அம்மா என் கொடுமையை நான் என்னவென்று என் வாயில் வைத்துச் சொல்லுவேன் தாயே! உலகத்திலுள்ள கோடாதுகோடி ஜனங்களையெல்லாம் காப்பாற்றும் தெய்வம் என் விஷயத்தில் மாத்திரம் இப்படிச் சதி செய்துவிட்டதே! இனி இந்த ஜென்மத்தில் என் கலியும் நீங்கப் போகிறதா இனி மனிதர்