பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 119 முதலியாரது மனையாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பாழ்த்து வீணாய்ப் போய்விட்டதென்றும், இனி தாங்கள் தப்ப வகையில்லையென்றும், தங்களது துன்பம் துயரம் முதலிய வற்றிற்குப் பரிகாரமாகத் தான் தனது உயிரை மாய்த்துக் கொள்வதே முடிவென்றும் தீர்மானித்திருந்த வீரம்மாளுக்கு நமது திவான் முதலியாரது மனையாட்டியாரும் ஆதரவளித்தது தெய்வமே நேரில் தோன்றி அபயப் பிரதானம் கொடுத்ததுபோல இருந்ததன்றி, ஒருவித நம்பிக்கையும், மனோதிடத்தையும் இன்பகரமான மன எழுச்சியையும் உண்டாக்கியது. உடனே திவானும் ஏறி உட்கார்ந்து கொண்டு, தமது மனைவியை நோக்கி, "உனக்கு உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? நாம் போகலாமா? உனக்கு வேண்டுமானால் இந்தக் குளத்திலிருந்து கொஞ்சம் ஜலம் கொண்டுவந்து கொடுக்கட்டுமா?’ என்றுகூற, அந்த அம்மாள் சிறிது தெளிவடைந்து, 'இப்போது உடம்பு கொஞ்சம் சரிப்பட்டுவிட்டது. நேரமாகிறது. நாம் ஊருக்குப் போகலாம்” என்றாள். உடனே திவான் முதலியார் தமது மோட்டார் வண்டியை விடுத்துக்கொண்டு சென்று இரண்டு நாழிகை காலத்தில் திருவனந்தபுரத்தை அடைந்து தமது மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்போது இரவு வேளை வந்துவிட்டது. வீரம்மாளுக் குத் தமது மாளிகையிலேயே போஜனம் அளித்து, அன்றைய இரவில் தன்னுடன் கூடவே வைத்திருக்கும்படி தமது மனை விக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, திவான் தமது பிரத்தியேக விடுதியை அடைந்து தமது கையாலேயே சில தாக்கீதுகள் தயாரித்துத் தமது சேவகர்கள் மூலமாய்ச் சில உத்தியோகஸ்தர் களுக்கு அனுப்பினார். அன்றைய இரவில் அவருக்கும் அவரது மனையாட்டிக்கும் போஜனத்திலாவது நித்திரையிலாவது மனம் நாட்டம் கொள்ளவில்லை. வீரம்மாளின் மனநிலைமையும் அதுபோலவே இருந்தது. ஆனாலும் திவான் முதலியாரின் மனையாட்டி தனக்குச் செய்த உபசரணையைத் தடுக்க முடியாதவளாய்ச் சிறிதளவு போஜனம் உண்டு வசதியான படுக்கையில் சயனித்து அந்த இரவைப் போக்கினாள். பெருத்த அரண்மனை போலத் தோன்றிய அந்த மாளிகையின்