பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செளந்தர கோகிலம் அந்த மடமயிலின் அன்பு ததும்பிய மாதுரியமான மொழி களைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் ஒரு நிமிஷநேரம் தனது சகலமான துன்பங்களையும் துயரங்களையும் மறந்து ஆநந்த பரவசம் அடைந்து பூரித்துப் புளகாங்கிதம் எய்தினாள். அவள் அதுவரையில் கோகிலாம்பாள் பேசியதைக் கேட்டவளன்று, ஆதலால், அந்த இன்டவல்லி மகா உருக்கமாகவும், பரிவாகவும், பணிவாகவும், பெருந்தன்மையாகவும், அன்பே நிறைவாகவும் பேசிய கனிமொழிகளைக் கேட்க, அப்படிப்பட்ட விலையில்லா மாணிக்கம் தனக்கு மருமகளாக வாய்க்கப்போவது, தானும் தனது முன்னோரும் எத்தனையோ ஜென்மங்களில் செய்த பூஜா பலனே அன்றி வேறல்ல என்று நினைத்துப் பெருமையும் மன வெழுச்சியும் அடைந்து மட்டுக்கடங்காப் பெரு விம்மிதம் எய்தி இரண்டொரு நிமிஷ நேரம் பேரின்ப வாரிதியில் தோய்ந் திருந்தபின், கண்கள் ஆநந்த நீர் சொரிய, அவளைப் பார்த்து, 'கண்ணே உன்னுடைய வார்த்தையைக் கேட்க, என்னுடைய கலியெல்லாம் நீங்கினாற் போன்ற ஒரு திடமும், ஆநந்தமும் பூரிப்பும் என் மனசில் சுரக்கின்றன. ஏதோ எங்களுடைய நல்ல கிரகந்தான் இப்படிப்பட்ட அபாய காலத்தில், எங்களை இங்கே கொண்டு வந்துவிட்டு, உங்களுடைய நட்பையும் எங்களுக்குச் செய்து வைத்தது. இனி நீங்கள் எப்படிச் சொல்லுகிறீர்களோ அப்படியே நான் செய்யத் தடையில்லை. நீ சொன்னபடி, நாங்கள் வேறு நீங்கள் வேறு என்ற நினைவையே நான் விட்டு விட்டேன். இனி எல்லாவற்றையும் உங்களுடைய பிரியப்படியே நடத்துங்கள்” என்று கரை கடந்த வாத்சல்யத்தோடு மனம் நைந்து கனிவாகக் கூறினாள். - அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த சந்தோஷமும் பூரிப்பும் அடைந்தவளாய்க் கற்பகவல்லியம்மாளைப் பார்த்து, 'அம்மா! நீங்கள் காலையில்கூட அதிகமாக ஒன்றையும் சாப்பி டவில்லையே, ஏதாவது கொஞ்சம் ஆகாரம் பார்த்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுங்கள். புஷ்பாவதியம்மாள் முதலியோரும் நெடுநேரமாகப் பட்டினியிருக்கிறார்கள். நாங்கள் போய் அவர்களுக்கு எல்லாம் போஜனம் நடத்தி வைக்கிறோம். எல்லோருக்கும் விருந்து நடத்துவதற்காகத் தயாரித்து மலை