பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.4 - செளந்தர கோகிலம் கொண்டிருக்கிறார். நான் மனிதருடைய உதவி கிடைக்கு முடியாத இந்த இடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நான் மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரண சுத்தியால் என் கற்பை இழக்க எண்ணாத பரிசுத்தமான மனுவி என்பதும் அவருக்குத் தெரியும். அப்படி இருந்தும், என் விஷயத்தில் நீங்கள் அக்கிரமம் நடத்தும்படி அவர் விட்டுவிடுவாரானால் அவருடைய சிருஷ்டி நீதியில்லாததும் கேள்வி முறையற்றதுமான சிருஷ்டியாய்விடும். அப்படி ஆகுமென்று நான் நினைக்கவே இல்லை. நான் எத்தனையோ பதிவிரதா ஸ்திரீகளின் கதைகளைப் படித் திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இப்படித்தான் பயங்கரமான தனித்த இடத்தில் உங்களைப்போன்ற துஷ்டர்களிடம் அகப்பட்டுக் கொண்டதாகவும், முடிவில் வெகு சுலபமாகத் தப்பித்து நிஷ்களங்கமாய்ப் போனதாகவும் நான் படித் திருக்கிறேன். மேனகா, ஷண்முகவடிவு என்ற பெண்களின் கதையை நான் சமீபகாலத்தில் படித்திருக்கிறேன். அவை களிலிருந்து நான் முக்கியமாக கற்றுக்கொண்ட படிப்பினை என்ன தெரியுமா? ஸ்திரீகள் திரிகரண சுத்தியாய்த் தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணி அதே உறுதியாக இருக்கும் பட்சத்தில் இராவணனே வந்து அவர்களை எடுத்துப் போனாலும், அவர்களைக்கொண்டு போய் இரும்புக் கோட்டைக்குள் சிறை வைத்தாலும், அவர்களுடைய கற்புக் குலையாமல் இருக்கும்படி கடவுள் ஏதாவது சூழ்ச்சி செய்வார் என்ற முக்கியமான படிப்பினையை நான் கற்றுக் கொண்டேன். அதுமுதல் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றி நான் அதிகமாய்க் கவலைப் படுவதையே விட்டு விட்டேன். பெண்களுக்கு உறுதியான மனமொன்றே தேவை. மற்ற துணைக் கருவிகள் யாவும் தாமாகவே தோன்றுமென்பது முக்காலும் திண்ணம். நீங்கள் சொன்ன துச்சாதனன் உபமானத்தில் அவனுடைய கருத்து எவ்வளவு தூரம் நிறைவேறியது என்பதை நீங்கள் அறிவீர்களென்று நினைக்கிறேன். ஆகையால், நீங்கள் வீணாய் மனப்பால் குடிக்கவேண்டாம். கற்பென்பது சர்வ வல்லமையுள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டுப் பாதுகாக்கப் படும் மகா பரிசுத்தமான ஒரு தெய்விக வஸ்து. அதை அழித்துக்