பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11-வது அதிகாரம் பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை ஆ தொடர் மங்கலமென்ற ஊரில் முகாம் ஆ செய்திருந்த திவான் முதலியார் தமது சமையற் இ. காரனான முத்துசாமி தெரிவித்த வரலாற்றைக் , கேட்டுத் தாங்கவொண்ணாத அபாரமான தி விசனத்தினாலும் மன எழுச்சியினாலும் தாக்கப் தி பட்டு மூர்ச்சித்து மேஜையின்மீது குப்புறச் சாய்ந்தார் அல்லவா? அப்போது அவ்விடத்தில் முத்துசாமியைத் தவிர வேறு யாரும் இல்லை ஆதலாலும், அவர்களுக்குள் நடந்த சம்பாஷணை நிரம்பவும் தணிவான குரலில் ரகளியமாக நடந்தது. ஆதலாலும் முத்துசாமியும், திவானும் விபரீதமான நிலைமையில் இருந்தார்கள் என்பதை மற்ற எவரும் தெரிந்துகொள்ளவில்லை. அப்போது முத்து சாமியினது உடம்பின் நிலைமை சொல்லிலடங்காத மகா துன்ப கரமான நிலைமையாக இருந்தது. அவனது உடம்பிற்குள் சென்ற பாஷாணம் இரத்தத்தில் கலந்துகொண்டு உடம்பு முழுவதும் பரவி, தலைக்கும் ஏறிப்போய்விட்டது. ஆகையால், அவனது உடம்பு கட்டிலடங்காமல் தத்தளிக்கிறது. ஒவ்வோர் அங்கமும் தெறித்துத் தனித்தனியாய்க் கிழிந்து விடுமோவென்னும் நிலைமையை அடைந்தது. குடல்களும் இரத்தமும் உடம்பை விட்டு வெளிப்பட்டு விடக்கூடிய நிலைமையை அடைந்து விட்டன. தொண்டை வறண்டு போய் முறுக்கிக் கொள்ளுகிறது. வயிறு முழுதும் துண்டு துண்டாய்க் கிழிபட்டு வாய் வழியாக வெளியில் வந்து விடுமோ வென்னலாம்படி ஆய்விட்டது. அவனது கண்கள் தெறித்து வெளியில் வந்துவிடத்தக்க நிலைமையை அடைந்தன. கீழே படுத்துப்புரள ஆரம்பித்த