பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O செளந்தர கோகிலம் யாலும், திவான் வெகுசீக்கிரத்தில் இளைத்துக் கருத்துத் துரும்பாய் மெலிந்து முற்றிலும் உருமாறிப் போய்விட்டார். அவரது தேக நன்னிலைமையும், குலைந்து, இருமல் ஜூரம் முதலிய நோய்களுக்கு இருப்பிடமாயிற்று. மினுமினுப்பாக இருந்த அவரது முகம் வாடி வதங்கிக் காய்ந்துபோயிற்று. கன்னங்களின் எலும்புகள் வெளிப்படத் தொடங்கின. தாமே தமது வடிவத்தைக் கண்ணாடியில் பார்த்தால், தமது அடை யாளத்தைக் கண்டுக்கொள்ளக் கூடாதபடி அவர் அடியோடு மாறிப்போனார். அவ்வாறு இளைத்து முற்றிலும் வேறுபட்டுப் போனதற்கு அநுகுணமாக அவர் முன்னரே தமது தலையை மொட்டையடித்து மீசையை எடுத்துவிட்டு, காஷாய அங்கி விபூதி, ருத்திராr மாலைகள் முதலியவற்றை அணிந்து கொண்டிருந்தமையால், அவரது பழைய தோற்றம் அடியோடு மாறிப்போய் விட்டது. அவருடன் எப்போதும் இருந்து பழகிய காந்திமதியம்மாளோ, திருவனந்தபுரத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய இதர மனிதர்களோ, அவரை உற்று நோக்கினாலும், அவர் இன்னார் என்பதை அறிந்துகொள்வது முற்றிலும் துர்லப மாகப் போய்விட்டது. அத்தகைய நிலைமையை அடைந்த திவான் சநிதொடர் மங்கலத்தை விட்டுப் புறப்பட்டதற்குச் சுமார் மூன்று மாத காலத்திற்குப் பிறகு திருவிடமருதுரருக்கு அருகில் போய்ச் சேர்ந்தார். இரண்டு மூன்று தினங்களில் தாம் தமது சொந்த ஊரை அடைந்துவிடுவோம் என்ற நினைவு தோன்றத் தோன்ற அவரது ஆவலும் வேதனைகளும் மலை போலப் பெருகி சகிக்கவொண்ணாத சஞ்சலத்தை உண்டு பண்ணின. தாம் எவ்விதமான விபரீதச் செய்தியைக் கேட்க நேருமோ என்ற எண்ணமும், தாம் இறந்து போனதாகக் கேள்வியுற்ற தமது தந்தை உயிருடன் இருக்கிறாரோ, அல்லது தமது செய்கையே அவருக்கு எமனாய் முடிந்துவிட்டதோ என்ற எண்ணமும், காந்திமதியம்மாள் தமது கள்ள நாயகனோடு பகிரங்கமாய் வாழ்வதைத் தாம் காண நேருமோ என்ற எண்ணமும், அல்லது அவள் குற்றமற்றவளாயிருந்தால், தான் வைதவ்வியம் அடைந்ததைச் சகியாமல் அவள் எவ்வித நிலைமை யில் இருக்கிறாளோ அல்லது கிணற்றில் குளத்தில் விழுந்து இறந்துவிட்டாளோ என்ற எண்ணமும் மாறிமாறி மும்முரமாக எழுந்து பெருகி அவரை ஓயாமல் கொன்று கொண்டே இருந்தன. தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...