பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 279 குளங்கள் சத்திரம் கடைகள் முதலிய வசதிகள் காணப பட்டமையால், தாம் அந்த இரவை அவ்விடத்திலிருந்து கழிப்பதென்று நமது சாமியார் தீர்மானித்துக்கொண்டு அவ்வாறே அந்த ஊரில் தங்கினார். கோவில் சுவாமி தரிசனம், சத்திரத்தில் சாப்பாடு, திண்ணையில் படுக்கையாக அந்த இரவு கழிந்தது. அந்த ஊரும் இருப்பதற்கு வசதியானதாய் இருந்தது. ஆகையால், தாம் அவ்விடத்தில் இரண்டு தினங்கள் இருந்து பிறகு புறப்பட்டுப் போவதென்று சாமியார் தீர்மானித்துக் கொண்டார். ஆனால், அவ்விடத்தில் அவர் ஒரு நாளைக்கு அதிகமாய் இருக்க இயலாமல் போய்விட்டது. அந்த ஊரில் இருந்த சத்திரம் தர்ம சத்திரமாதலால், அவ்விடத்தில் ஏழைப் பிரயாணிகளுக்கும், பரதேசிகளுக்கும் இலவசமாய்ப் போஜனம் அளிக்கப்பட்டது பற்றி, அந்தச் சத்திரத்தின் திண்ணையில் ஏராளமான பரதேசிகளும், பிச்சைக்காரர்களும் எப்போதும் நிரம்பி இருந்தனர். அவர்களுள் சிலர் தவிர மற்றவர் விகாரமான தோற்றமும், அசங்கியமான ஆடைகளும், கஞ்சாக் குடித்தல், பங்கியடித்தல், கள் குடித்தல் முதலிய துர்நடத்தைகளும், இழிவான சம்பாஷணையும் உடையவராய் இருந்தமையால், அவர்களுக்கிடையில் இருந்தது திவான் சாமியாருக்கு நிரம்பவும் துன்பகரமாக இருந்தது. ஆகையால், அவர் அவ்விடத்தை விட்டு மறுநாளே புறப்பட்டு வேறோர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார். அவ்வாறு திவான் மூன்று மாதகாலம் நடந்து ஷேத்திரவாசம் தீர்த்த யாத்திரை முதலியவற்றைச் செய்தபடி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்காமல் சென்று கொண்டே இருந்தார். அவ்வாறு தொடர்ச்சியாகக் கால் நடையாய் நடந்து சென்றமையாலும், ஒவ்வோர் ஊரில் ஒவ்வொரு விதமான ஆகாரமும் தண்ணீரும் கிடைத்தமையாலும், பஞ்சணையில் சயனித்த உடம்பைக் கரடுமுரடான திண்ணைகளில் போட்டுப் படுக்க நேர்ந்தமையாலும், எப்போதும் அவரது மனத்தில் குடிகொண்டு அதை ஒயாமல் புண்படுத்திக் கொண்டே இருந்த விசனமும் சஞ்சலமும் நிமிஷத்திற்கு நிமிஷம் பெருகிக் கொண்டே இருந்தமையாலும், தாம் உயிருக்குயிராய் நினைத்துக் காதலித்த காந்திமதியம்மாளையும் ராஜாபகதூரையும் நெடுங் காலமாய் விட்டுப்பிரிந்த ஏக்கத்தின் சுமையினாலும், காந்திமதி யம்மாளின்மீது ஏற்பட்ட சம்சயமாகிய பெரும்பேய் விலகாமல், அவரது மனத்தைக் கெட்டியாகப் பிடித்து ஆட்டிவைத்தமை