பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ 65 மனுக்கொடுக்கச்செய்து கண்ணபிரான் முதலியாரை உடனே ஜாமீனில் விடும்படி கேட்கச் செய்வோம். அதுவுமன்றி, அவரை நாம் பார்க்கவும் அவருக்கு நாம் ஆகாரம் கொண்டுவந்து கொடுக்கவும் உத்தரவு கொடுக்கும்படியும் கேட்கச்செய்வோம். அதற்காவது எப்படியும் உடனே உத்தரவு கிடைத்துவிடும். நாம் வந்து இவருடன் பேசி, இவர் அனுப்பிய கடிதத்தின் உண்மையை நன்றாகத் தெரிந்து கொள்வோம். இவருடைய கடிதத்தைக் கொண்டுவந்த மனிதன் இன்னான் என்பதும் உடனே தெரிந்துபோகும். அதைக்கொண்டு நாம் நம்முடைய குழந்தை எங்கே போயிருக்கிறதென்று தேடிப் பார்ப்போம்” என்றான். பூஞ்சோலையம்மாள் அந்தச் சமயத்தில் எவ்வித யோசனையை யும் ஆழ்ந்து செய்யவும், அதன் யுக்தா யுக்தங்களையும் ஆராயவும் திறனற்றவளாய் இருந்தமையால், "சரி, அப்படியே செய்வோம்’ என்று உடனே ஆமோதித்துவிட்டாள். அடுத்த rணத்தில் வேலைக்காரன் ஏறி வண்டியில் உட்கார்ந்தான். வண்டிக்காரன் குதிரையை நன்றாகத் தூண்டி வேகமாய் ஒட்டத் தொடங்கினான். கால் நாழிகைநேரத்தில் வண்டி மாஜிஸ்டி ரேட்டின் கச்சேரியை அடைந்து, ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தான் முதலில் போய் வக்கீல் ஒருவரைக்கண்டு பேசி அவரிடம் விஷயங்களைச் சொல்லி அவரை அமர்த்திவிட்டுவந்து பூஞ்சோலையம்மாளை அழைத்துக்கொண்டு போவதாகக் கூறிய வண்ணம் வேலைக்காரன் வண்டியை விட்டுக்கீழே இறங்கிப் போய் மாஜிஸ்டிரேட்டின் கச்சேரியிலிருந்த வக்கீல்களின் அறைக்குள் நுழைந்து, அவ்விடத்திலிருந்த ராமாராவ் என்ற ஒரு பிரபல வக்கீல் வேலையில்லாமல் தனிமையில் இருந்தததைக் கண்டு அவரிடம் நெருங்கி, அவரிடம் விஷயங்களைச் சுருக்கமாகத் தெரிவிக்கவே, அவர் உடனே அளவற்ற ஊக்கமும் சுறுசுறுப்பும் காட்டி, தாம் எப்படியாவது பிரயாசைப்பட்டுக் கண்ணபிரானை ஜாமீனில் விடும்படி செய்ய முயன்று பார்ப்பதாகவும், மாஜிஸ்டிரேட்டின் கச்சேரி கலைவதற்கு அரைமணி சாவகாசமே இருந்ததாகையால், பூஞ்சோலை யம்மாளை உடனே அழைத்து வரும்படியும் கூற, உடனே செ.கோ.:1-5