பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - செளந்தர கோகிலம் மாட்டாமல் வெட்கி, மிகவும் குன்றிப்போய், உயிரற்ற சவம் போலக் கிடந்தாள் ஆனாலும், அப்படிப்பட்ட மகா சோதனை யான காலத்திலும் அந்தத் தனிகர்களாக புண்ணிவதிகள் தன்னைக் கைவிடாமலும் தன்னைப்பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்ளாமலும் முன்போலவே, மரியாதை, வாஞ்சை முதலிய வற்றைத் தோற்றுவிப்பதைக் காணக்கான அவள் நன்றியறிதலி னால் உருகிக் கண்ணிர் விடுத்ததன்றி, அவர்களிடத்தில் பேசு வதற்கு ஒரு சிறிது துணிவடைந்தவளாய்ப் பூஞ்சோலையம் மாளை நோக்கி, 'அம்மா! உங்கள் இருவரைப் போலத் தங்க மான மனசையுடைய மனிதர்கள் இந்த உலகத்தில் இருப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. எங்களால் உங்களுக்கு இன் றையதினம் நேர்ந்த விசனமும், அவமானமும் பழியும் கொஞ்சம் நஞ்சமல்ல. உங்களுடைய நிலைமையில் வேறே யாராவது இருந்தால், இந்நேரம் என்னை அவமானப்படுத்தி வெளியில் துரத்தியிருப்பார்கள். நீங்களோ உங்களுடைய மனசிலுள்ள சஞ்சலங்களையெல்லாம் அடக்கிக்கொண்டு, இந்த மகாபாவிக்கு விடாமுயற்சியோடு இன்னமும் உபசாரம் செய்துகொண்டி ருக்கிறீர்கள். என்னவோ, இந்தச் சமயத்தில், உங்களுக்கு எங்களால் இப்படிப்பட்ட இழிவும் அவமானமும் ஏற்பட் டாலும், ஈசுவரன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். நாங்கள் பரம தரித்திரர்கள்; எப்போதும் ஏழ்மையிலும் தாழ்மையிலும் இருந்து கஷ்டப்படப் பிறந்தவர்கள். அப்படிப் பட்ட கருத்தோடு கடவுள் எங்களைப் படைத்திருக்க, அவரு டைய திருவுளத்துக்கு மாறாக நீங்கள் எங்களைத் திடீரென்று இப்படிப்பட்ட மகோன்னத பதவிக்கு உயர்த்தி எங்களையும் உங்களுக்குச் சரிசமானமாகச் செய்ய முயன்றால், அது பலிக்குமா? குபேர பட்டணம் கொள்ளை போனாலும் எங்களைப்போன்ற நித்திய தரித்திரர்களுக்கு அந்த இடத்தில் அடியும் உதையுந்தான் கிடைக்குமன்றி, காதறுந்த ஒர் ஊசி கூடக் கிடைக்காது; எங்கள் தலைப்பொறியை நாங்கள் தொலைத்தே தீரவேண்டும். அதற்கு மாறாக நாங்கள் நடந்தால், மீளாத்துன்பமும் ஆராத்துயரமும் தீரா அவமானமும் சம்பவிப்பது நிச்சயம்; ஆகையால் இனிமேல் ஒரு விநாடி நேரம்கூட நான் இங்கே இருப்பது சரியல்ல; எங்க ளால் உங்களுக்கு இன்றைய தினம் முழுதும் ஏற்பட்ட துக்கமும்