பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 97 நிறைந்திருந்தது. ஆனாலும், எவரும் அந்த அம்மாளின் வயதை இருபதிற்குமேல் மதிக்கவில்லை. அந்த மாதரசியை அழகைக் கடைந்தெடுத்த ஸாரம் என்றாலும், மிருதுத் தன்மையின் திரள் என்றாலும், கலியான குணங்களின் சட்டகம் என்றாலும், கற்பின் நிலையம் என்றாலும் எதுவும் முற்றிலும் பொருந்தும். அத்தகைய பெருத்த பதவியை வகிக்கும் புருஷர்களது மனைவிமார் அவசியம் இங்கிலீஷ் பாஷை கற்றிருக்க வேண்டு மென்பதும், தமது புருஷர்கள் வெள்ளைக்காரர்களோடு சம்பாஷிக்கும் பொழுது அவர்களும் வெள்ளைக்காரர்களோடும், அவர்களது மனைவிமார்களோடும் சம்பாவிக்கும் திறமை உடையவர்களாயிருக்க வேண்டுமென்பதும் தற்கால நாகரிகத்திற்கு ஏற்ற அம்சங்களென்று பலர் கருதுகின்றனர். ஆனாலும், நமது திவான் முதலியாருடைய தேவியார் நமது புராண காலத்து சாவித்திரி தேவிபோலவும், சீதாதேவி போலவும் எவ்விஷயத்திலும் ஒழுகி வந்தார். திவான் முதலியாரும், அவரது மனையாட்டியும் ஈருடலும் ஒருயிருமாய் இருந்தனரென்று சொல்வதைக் காட்டிலும் மகாவிஷ்ணுவும், லகதிமிதேவியும் போல இருந்தனர் என்பதே அவர்களது உண்மையான சம்பந்தத்தை உள்ளபடி கூறுவதாகும். அவர்களுக்குப் பன்னிரண்டு வயதடைந்த ஒரு புதல்வன் இருந்தான். அந்த திவான் தமது ஆளுகையில் அந்த சமஸ்தானத்திலுள்ள குடிமக்கள் எல்லோரும் rேமகரமாகவும் மங்களகரமாகவும் இருந்து அமோகமாய்ப் பெருகி நல்வாழ்வு வாழவேண்டுமென்ற ஒரே கருத்தையே இரவு பகல் பிரணவ மந்திரமாக வைத்து ஜெபித்து இராஜாங்க நிர்வாகம் முழுவதையும் நீதிநெறி தவறாமல் நடத்தி வந்ததன்றி பல இடங்களுக்கும் தாமே போய் முக்கியமான விஷயங்களை எல்லாம் நேரில் பார்வையிட்டு வந்தார். அவர் அப்போதைக்கப் போது தமது உத்தியோக முறைமைப்படி சகலமான பரிவாரங்களுடன் வெளியூர்களுக்குப் போய்ப் பல தினங்கள் வரையில் முகாம் செய்து, அவ்வவ்விடங்களிலுள்ள குடி ஜனங்களின் குறைகளையும் இடர்களையும் நேரில் விசாரித்து அறிந்து, அததற்குத் தக்க பரிகாரம் செய்து வந்ததன்றி, தனியாகவும், தமது மனையாட்டியையை மாத்திரம் அழைத்துக் கொண்டும் மோட்டார் வண்டியில் உட்கார்ந்து முப்பது மைல், செ.கோ.II-7