பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் SS இரண்டு ஜாதியாருடைய ஆசார வேறுபாடுகளும் கலந்தும் வேறுபட்டும் விநோதமாகக் காணப்பட்டன. நமது திவானும் அவரது மனைவியுமான காந்திமதி யம்மாளும் அந்த இடத்தை அடைந்தது பிற்பகல் ஐந்து மணி சமயமாதலால், அந்த ஊர்ப் பெண்பிள்ளைகள் இடுப்பில் குடமும், கையில் அழுக்குத் துணி மூட்டையுமாக வருவதும், துணிகள் துவைப்பதும், தண்ணிர் எடுத்துப் போவதுமாய்க் காணப்பட்டனர். ஆனால், எல்லோரது முகங்களும் ஒருவித மான படபடப்பையும், விசனத்தையும், ஆத்திரத்தையும் தோற்று வித்தன. எவரும் வாய்விட்டு ஓங்கிப் பேசவே எண்ணவில்லை. அவர்கள் ஒருவரோடொருவர் தணிவான குரலில் கொசகொச என்று மெதுவாக ஏதோ ஒரு சம்பவத்தைப் பற்றி நிரம்பவும் மனவருத்தத்தோடும், கவலையோடும் பேசிக்கொண்டதாகத் தெரிந்தது. நமது திவான் அன்னிய ஸ்திரீகளின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பது பெருத்த ஒழுக்கத் தவறு என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்தார். ஆதலால், அவர் அங்கு வந்து போய்க் கொண்டிருந்த மாதர்களின் முகத் தோற்றத்தையும் படபடத்த நிலைமையையும் கவனியாமல் தமது இயற்கையின்படி குதூகலமாகவும் சிரித்த முகத்தோடும் தமது ஆருயிர் மனையாட்டியோடு சம்பாஷித்து அங்கிருந்த இயற்கை அதிசயங்களை அவளுக்குக் காட்டுவதிலேயே தமது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தார். ஆனாலும், அவரது மனையாட்டி அவருடன் சம்பாவித்தவண்ணம் அங்கு வந்து போன ஸ்திரீகளைக் கவனித்தாள். ஆதலால், அந்த ஊரில் அன்று ஏதோ ஒரு விபரீத சம்பவம் நேர்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணம் அந்த அம்மாளது மனத்தில் சரேலென்று தோன்றியது. உடனே அவள் தனது புருஷனை நோக்கி, 'இந்த ஊரில் இன்றைய தினம் விபரீதமான காரியம் ஏதோ ஒன்று நடந்திருக்கும் போலிருக்கின்றது. ஜனங்கள் ஓங்கிப் பேசாமல் ரகளிலியமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுகிறார்கள். எல்லோருடைய முகமும் ஆத்திரத்தையும் விசனத்தையும் காட்டுகிறது” என்று மிருதுவாகக் கூறினாள். அதைக் கேட்ட திவான் உடனே சரேலென்று தமது கவனத்தைச் செலுத்தி குளத்தின் படித் துறையில் நின்றுகொண்டிருந்த ஸ்திரீகளை